being created

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட்

From Tamil Wiki
Revision as of 14:43, 20 May 2024 by Ramya (talk | contribs) (Created page with "ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் ஈழத்துப் பெண் இசைக் கலைஞர். ஸ்ப்த ஸ்வரப்புன்னை என்ற இசை சார்ந்த நூலை எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் இலங்கை மன்னார் வங...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் ஈழத்துப் பெண் இசைக் கலைஞர். ஸ்ப்த ஸ்வரப்புன்னை என்ற இசை சார்ந்த நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் இலங்கை மன்னார் வங்காலையில் அந்தோனி, றொசாரி இணையருக்குப் பிறந்தார். வங்காலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். சுண்டுக்குழி மகளிர் உவைஸ்லி கல்லூரியிலும், யாழ்ப்பாணத்திலும் இடைநிலை, உயர்கல்வியை கற்றார். இசைக்கல்வியினை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் கற்றார். தனது கண் பார்வையை 15 வயதில் இழந்தார்.

ஆசிரியப்பணி

பட்டதாரியான ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் ஆசிரியராக உள்ளார். இவர் கற்பிக்கும் வங்காலை பாடசாலையில் உள்ள மேலேத்தேய மற்றும் கீழைத்தேய இசைக்குழு இரண்டினையும் இவரே வழிநடத்துகின்றார்.

கலை வாழ்க்கை

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் மேலைத்தேய இசை, கர்நாடக இசை, சினிமா இசை என்ற மூன்று துறைகளைிலும் இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவர். அருட்தந்தை லீனஸ் வெளியிட்ட இதயம் திறந்தேன் இறுவட்டில் நான்கு பாடல்களுக்கு மெட்டமைத்து அதில் இரண்டு பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். அருட்தந்தை மலர்வேந்தன் அவர்களின் புலரும்பொழுது இறுவட்டிலும் இவர் பாடியுள்ளார். அருட்தந்தை போல் சற்குணராஜா அவர்களின் ஏற்பாட்டில் இரண்டரை மணித்தியாலம் நடைபெற்ற இசை கலந்த நாட்டிய நாடக நிகழ்வில் 16 பாட்டுக்கள் இடம்பெற்றது இவற்றிற்கு இடையில் வசனம் வரும் அந்த 16 பாட்டுக்கும் இவர் மெட்டமைத்துப் பாடியுள்ளார். இவரின் நேர்காணல்கள் ஐரிஎன் தொலைக்காட்சியின் உதயதரிசனம் நிகழ்ச்சியில் 1999-ல் ஒளிபரப்பட்டது.

எழுத்து

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் “ஸ்ப்த ஸ்வரப்புன்னை” என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

  • சங்கீத கலாவித்தகர் – வட இலங்கை சங்கீத சபை

நூல் பட்டியல்

  • ஸ்ப்த ஸ்வரப்புன்னை

உசாத்துணை

  • ஆளுமை:ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் - noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.