under review

கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை

From Tamil Wiki
Revision as of 10:20, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
கம்பனும் மில்டனும்

கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை (1978 ) முனைவர். எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) எழுதிய ஒப்பிலக்கிய ஆய்வு. தமிழ் ஒப்பிலக்கிய ஆய்வுகளில் முன்னோடியானதாகவும் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டவரும் கல்வியாளருமான முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுந்திய இந்நூல் 1976ல் மதுரை (காமராசர்) பல்கலை கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடாக சமர்ப்பிக்கப்பட்டது. 1978ல் நூல்வடிவை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. முனைவர். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தார். இந்நூலை இருபதாண்டுகள் நீண்ட ஆய்வின் விளைவாக எழுதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

நூல் அமைப்பு

முன்னுரை

பின்புலச்செய்திகள்
  • கதை
  • காலம்
  • கவிஞர்
  • கொள்கை

காவிய மரபு

முன்னுரை
  • இந்தியத்திறனாய்வு
  • மேலையவிமர்சனம்
  • கம்பனும் மில்ட்டனும் கண்ட கட்டுக்கோப்பு
  • பழைய காவியங்களின் செல்வாக்கு

பொருளுரை

பாயிரம்
இலட்சியவாழ்வு
  • இலட்சியப் பொதுவுடைமைச் சமுதாயம்
  • வான்மீகக்காட்சியைப் புதுக்கிய புரட்சி
  • மில்டன் கண்ட செம்மைகாட்சி
  • முன்நோக்கும் கம்பன் பின் நோக்கும் மில்டன்
  • இறைமையின் இயல்பு
இராமகாதை ஏறுமுகம்
  • பாலகாண்டப் படைப்பு
  • கைகேயியின் வீழ்ச்சி
  • நியாயவாதிகள்
  • துன்பியல் தலைவர்
  • இடாமன் பெறும் ஏற்றம்
  • பரதன் பண்பு
துறக்கநீக்கத்தின் தொடக்கம்
  • சாத்தான் காவியத்தலைவனா
  • சாத்தானும் இராவணனும்
  • காவியக்குரல்
  • படிமங்கள் வழங்கும் தெளிவு
  • பாண்டிமோனிய விவாதம்
  • இலங்கை விவாதத்தோடு ஒப்பீடு
  • இருவகை வீரம்
திருப்பு மையங்கள்
  • ஏற்றத்துவக்கம்
  • சூர்ப்பனகைச் சூழ்ச்சி
  • சீதாபகாரம்
  • நரன் நலம் பேணும் இறையருள்
  • மானிடன் வீழ்ச்சி
  • ஒப்புநோக்கு
இராமகாதை இறங்கு முகம்
  • நான்கு சம்பவங்கள்
  • வாலிவதை
  • அரக்கர் சமூக அமைப்பு
  • தீயனும் தூயளும்
  • தேவியும் தூதனும்
  • சகோதரத்துவம்
  • மேகநாதன் வதம்
சிக்கல் அவிழும் சிறப்பு
  • இராவண வதம்
  • கவிஞர் கண்ட மெய்ஞானக் காட்சிகள்
  • கற்பின் கனலி கனலுள் புகுதல்
துறக்கநீக்கத்தின் தீர்வு
  • இராமன் மௌலி புனைதல்
பின்னுரை
  • துறக்கநீக்கச் சுருக்கம்
  • காவிய காலம்
  • கம்பன் வாழ்ந்த காலம்

இலக்கிய இடம்

ஒப்பிலக்கிய ஆய்வின் நோக்கம் வழிமுறை ஆகியவற்றை வரையறை செய்த நூல்களில் முன்னோடியானது. இரு இலக்கியங்களை ஒப்பிட்டு அவை எப்படி ஒத்துச்செல்கின்றன, வேறுபடுகின்றன என்று சொல்வது மட்டுமே ஒப்பிலக்கிய ஆய்வாக இருந்தது. எஸ்.ராமகிருஷ்ணன் அவ்விரு படைப்புகளும் முன்வைக்கும் தத்துவப்பார்வை, சமூகப்பார்வை ஆகியவற்றை துலக்கமுறச் செய்ய ஒப்பிடலை பயன்படுத்துகிறார். எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை மார்க்ஸிய அடிப்படையிலானது. ஆகவே கம்பனில் உள்ள மானுடநேயக் கூறுகளை முதன்மைப்படுத்துகிறார். தமிழுக்கு திறனாய்வு மரபு உண்டா, எனில் அது என்ன என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் நூல்

(பார்க்க கம்பன் புதிய பார்வை. அ.ச.ஞானசம்பந்தன்)

உசாத்துணை

https://nadappublogs.blogspot.com/2017/10/blog-post_14.html


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.