under review

சுபானி ஸ்ரீரங்கராயன்

From Tamil Wiki
Revision as of 20:32, 10 May 2024 by Logamadevi (talk | contribs)

சுபானி ஸ்ரீரங்கராயன் (பிறப்பு: மார்ச் 24, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபானி ஸ்ரீரங்கராயன் இலங்கை களுத்துறையில் ஸ்ரீரங்கராயன், லெட்சுமி இணையருக்கு மார்ச் 24, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை விவேகானந்தா கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் (சிறப்புக்கலை) பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுபானி ஸ்ரீரங்கராயன் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார். 2017-ல் முகநூல் வழியாக எழுத்த ஆரம்பித்தார். இவரின் கவிதைகள் புரட்சிக் கருத்துக்களை உள்ளடக்கியவை. நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமங்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018-ல் வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகின. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகின. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் 'விரிந்த மொட்டுக்கள்' நூலிலும் ”தாய்மை” என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றது.

விருதுகள்

  • கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் ”Universal Achievers Book of the record & future kalams Books of the record” விருதைப் பெற்றார்.

உசாத்துணை


✅Finalised Page