first review completed

லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 06:25, 7 May 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Imagesட்.jpg

லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள அரசாங்கப் பகுதி உதவி பெறும் பள்ளி . இப்பள்ளியின் பதிவு எண் NBD 4087.

பள்ளி வரலாறு

லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜப்பானியர் காலத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி 1941 முதல் இப்பள்ளி இரண்டு முதல் மூன்று வகுப்பறைகள் கொண்டு இயங்கியது. இக்காலக்கட்டத்தில் சுவாமிநாதன் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். அப்போது ஜப்பானியர் ஆட்சி காலம் என்பதால் தமிழ் மொழியோடு ஜப்பான் மொழியும் போதிக்கப்பட்டது.

இணைக்கட்டிடம்

1991-ல் க. வாசுதேவன் தலைமை ஆசிரியராக இருந்தபோது இப்பள்ளி புதிய இணைக்கட்டம் ஒன்றினைப் பெற்றது. அப்போதைய மாநில முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஈசா பின் சாமாட் அவர்களால் இவ்விணைக்கட்டம் திறப்புக் கண்டது. ஆறு வகுப்பறைகளைக் கொண்டு செயல்பட்டு வந்த இப்பள்ளி, 2002-ல் நிகழ்ந்த தோட்டத் துண்டாடலினால் குறைவான மாணவர்களைக் கொண்டே செயல்பட்டது.

புதிய பள்ளிக்கான ஒப்புதல்

புதிதாக மாற்றலாகி வந்த தலைமை ஆசிரியர் மு.மஹேந்திரன், அப்போதைய லெங்கெங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இஷாக் இஸ்மாயிலுடன் புதிய நிலப்பகுதி தொடர்பாகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார். அதன் பயனாக அக்கூர் ஜெயா நில மேம்பாட்டு நிறுவனம் 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பள்ளிக்கான ஒப்புதலை வழங்கியது.

புதிய கட்டிடம்

செப்டம்பர் 10 , 2005 அன்று புதிய பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தி. இராஜகோபாலு மற்றும் முன்னாள் மாணவர் பொன். சின்னையாவின் தலைமையில் நடைபெற்றது. 2006 முதல் இப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப் பெற்று, மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

ஜூன் 3, 2007-ல் லெங்கெங் தமிழ்ப்பள்ளி பழைய இடத்திலிருந்து புதிய இடத்தில் செயல்படத்தொடங்கியது.

சிற்றுண்டிச்சாலை

லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தற்காலிகச் சிற்றுண்டிச்சாலையைக் கொண்டிருந்தது. 2008-ம் ஆண்டு அப்போதைய துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் ( ரி.ம 10,000), உதயசூரியனின் தலைமையிலான தமிழ் அறவாரிய (ரி.ம 10,000), மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்( ரி.ம 10,000 ) ஆகியோர் வழங்கிய 30,000 ரிங்கிட் நன்கொடையில் புதிய சிற்றுண்டிச்சாலை கட்டப்பட்டது.

புதிய இணைக்கட்டிடம்

2009-ல் பிரதமர் துறை இலாகாவின் ஆரம்பப்பள்ளிகளுக்கான சிறப்புநிதி ஒதுக்கீட்டின் வாயிலாக மூன்று அறைகளைக் கொண்ட புதிய இணைக்கட்டிடமும் இப்பள்ளிக்குக் கிடைக்கப்பெற்றது. அதோடு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க முயற்சியில் சபைக்கூடலுக்கான ஒரு பிரத்தியேக தளமும் அமைக்கப்பட்டது.

உசாத்துணை

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (1897 - 2011)



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.