first review completed

எருமை (ஊர்)

From Tamil Wiki

எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஊரின் பெயர்.

எருமை ஊர் பற்றி

  • மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் 'எருமை ஊர்' என்று அழைக்கப்பட்டன.
  • எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
  • ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
  • எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
  • எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் மாமூலனார்

சங்கப் புலவர்

எருமை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார் ஆகிய சங்ககாலப் புலவர்களின் பெயரின் முன்னொட்டாக எருமை ஊரின் பெயர் உள்ளது.

உசாத்துணை

  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.