கோனாடு
From Tamil Wiki
கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஊரின் பெயர்.
கோனாடு பற்றி
- பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர்.
- இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகை.
- கோனாடு இரட்டபாடி கொண்ட சோழவளநாடான கோனாடு என்றும், கோளாந்தக வளநாடான கோனாடு என்றும் கல்வெட்டுகளில் உள்ளது.
- கோனாடு வடகோனாடு, தென் கோனாடு, கீழ் கோனாடு என மூன்று வகை
- சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென் வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் பெயர்
- கீழ்கோனாடு இளங்கோனாடு என்றும் அழைக்கப்பட்டது
- தஞ்சை மாவட்டத்தின் அரந்தாங்கியே கீழ்கோனாடு
சங்கப்புலவர்
”கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்” கோனாட்டை முன்னொட்டாகப் பெயருடைய சங்ககாலப் புலவர்.
உசாத்துணை
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.