second review completed

பின்னங்கள்

From Tamil Wiki
Revision as of 07:07, 17 April 2024 by Tamizhkalai (talk | contribs)
பின்னங்கள்

முழு எண் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகள் பின்னங்கள் என்று அழைக்கப்பட்டன. கீழ்வாய் எண்கள் என்ற பெயரும் இவற்றுக்கு உண்டு.

பின்ன எண்கள்

கணக்கியலில் ஒரு எண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது இரண்டில் ஒரு பகுதி (1/2) என்பதையோ, மூன்றில் ஒரு பகுதி (1/3) என்பதையோ குறிக்க பின்ன எண்களைப் பயன்படுத்தினர்.

இவற்றில் கிடைக்கோட்டுக்கு மேல் உள்ள எண் தொகுதி என்றும், கீழ் உள்ள எண் பகுதி என்றும் பெயர் பெறும். இவ்வகைப் பின்ன எண்கள் தொகுதி- பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவிகிதங்களாக, அடுக்கேற்ற எண்களாகவும் எழுதப்பட்டன.

சான்று: 1/100 = 0.01, 1%, 10-2  

பின்னங்கள் - எண்ணுப் பெயர்கள்

பின்னங்கள் கீழ்க்காணும் எண்ணுப் பெயர்களால் அழைக்கப்பட்டன.

  • 1 - ஒன்று
  • 3/4 - முக்கால்
  • 1/2 - அரை
  • 1/4 - கால்
  • 1/5 - நாலுமா
  • 3/16 - மூன்று வீசம்
  • 3/20 - மூன்றுமா
  • 1/8 - அரைக்கால்
  • 1/10 - இருமா
  • 1/16 – மாகாணி (வீசம்)
  • 1/20 - ஒருமா
  • 3/64 – முக்கால் வீசம்
  • 3/80 - முக்காணி
  • 1/32 - அரைவீசம்
  • 1/40 - அரைமா
  • 1/64 - கால் வீசம்
  • 1/80 - காணி
  • 3/320 - அரைக்காணி முந்திரி
  • 1/160 - அரைக்காணி
  • 1/320 - முந்திரி
  • 1/102400 – கீழ் முந்திரி
  • 1/2150400 - இம்மி
  • 1/23654400 - மும்மி
  • 1/165580800 - அணு
  • 1/1490227200 - குணம்
  • 1/7451136000 - பந்தம்
  • 1/44706816000 - பாகம்
  • 1/312947712000 - விந்தம்
  • 1/5320111104000 - நாகவிந்தம்
  • 1/74481555456000 - சிந்தை
  • 1/489631109120000 - கதிர்முனை
  • 1/9585244364800000 - குரல்வளைப்படி
  • 1/575114661888000000 - வெள்ளம்
  • 1/57511466188800000000 - நுண்மணல்
  • 1/2323824530227200000000 - தேர்த்துகள்

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.