being created

சுபாஷினி பிரணவன்

From Tamil Wiki

சுபாஷினி பிரணவன் (பிறப்பு: ஜூலை 9, 1979) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபாஷினி பிரணவன் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஜெகநாதன், நாகரத்தினம் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அச்சுவேலி மத்திய கல்லூரியில் கற்றார். இடைநிலை, உயர் நிலைக் கல்வியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் வீணை சிறப்பு நுண்கலைமாணிப் பட்டம் பெற்றார். யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா முடித்தார். வாய்ப்பாட்டில் ஆசிரியர் தரம் வரை பயின்றார்.

நாடக வாழ்க்கை

சுபாஷினி பிரணவன் 1996 முதல் நாடகப் பிரதியாக்கம் எழுதுதல், நாடக நெறியாள்கை ஆகியவற்றில் ஈடுபட்டார். இருபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட நாடகங்களை பிரதியாக்கம் செய்து மேடையேற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தை இவரே எழுதி மெட்டமைத்தார். கொழும்பு இராமநாதன் கல்லூரியின் கணித மன்ற கீதம், நூலக மன்ற கீதம் அத்துடன் நல்லூரில் சாரங்கா இசை மன்றம், கொழும்பு நடேஸ்வராலயம் கலைக்கல்லூரி மன்றங்களுக்கான மன்ற கீதங்களையும் இவர் எழுதியுள்ளார். காசநோய் தொடர்பான ஏற்கனவே எழுதப்பட்ட பாடலுக்கு இவர் மெட்டமைத்து இசையமைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். கைகழுவும் தினத்திற்கு துரைசிங்கம் எழுதிய பாடலுக்கு இவர் மெட்டமைத்து இசையமைத்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சுபாஷினி பிரணவன் கவிதைகள் எழுதினார். ”பகிர்வு” எனும் கவிதைத் தொகுப்பை 2006-இல் வெளியிட்டார். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”குமுறல்” 2014-இல் வெளியானது.

விருதுகள்

  • சாதனைப் பெண் விருது - நந்தவனம் பவுண்டேஷன்
  • யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபை இவருக்கு நாடகமும் அரங்கியலும், வீணை ஆகிய துறைகளுக்கு கலாவித்தகர் பட்டத்தை வழங்கியது

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • பகிர்வு (2006)
  • குமுறல் (2014)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.