ம.வே.பசுபதி

From Tamil Wiki

தமிழறிஞர் ம.வே.பசுபதி(பிறப்பு: ஆகஸ்ட் 21, 1942). தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர்.பழஞ்சுவடிகளை ஆராய்ந்து, பல உரை நூல்களை எழுதியவர். இவர் பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார்.

பிறப்பு, கல்வி

ம.வே.பசுபதி (மந்திரவேதி வேங்கடராமையா பசுபதி) கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் ஆகஸ்ட் 21, 1942 அன்று கல்வெட்டாய்வாளரும், தமிழறிஞமான கா. ம. வேங்கடராமையா வுக்கும் அன்னபூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

தனி வாழ்க்கை

கல்விப் பணி

மவே.பசுபதி 1961 முதல் 1967 வரை அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1967 முதல் 1987 வரைதாம் படித்த திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி 1988 முதல் 2001 வரை அக்கல்லூரியின் முதல்வர் நிலையில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணி

tamildigitallibrary.in

ம.வே.பசுபதி ஓலைச்சுவடிகளிலிருந்து 23 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 15 சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார்.

டாக்டர் உ.வே.சா.அவர்களின் உரைநடை நூல்களைப் பதிப்பித்து நான்கு பகுதிகளாக வெளியிட்டார்.

ஆம் ஆண்டில் உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது.

திருப்பனந்தாள் மடம் வெளியிட்ட குமரகுருபரர் என்னும் சைவ இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

'செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்' உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக அவ்ர் வெளியிட்ட நாற்பத்தொரு நூல்கள் அடங்கிய தொகுப்புப் பதிப்பு. பழந்தமிழ் நூல்களின் மூலங்கள் பார்வையில் பாடவேறுபாடுகளுடன் வெளிவந்துள்ள இத்தொகுப்பு இந்நூற்றாண்டின் முதற்பெருந் தொகுப்பு நூலாகும். இப்பதிப்பு, பதப்ப்ரிரிப்பு செய்யப்பட்டதால்,முயற்சியினாலேயே பொருளுணர ஏற்றதாக உள்ளது.

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் திரு.வி.க.வின் மேடைத் தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொலைக்காட்சிகளில் அவரது பல உரைகள் ஆற்றியுள்ளார்.

படைப்புகள்

  • பெயரகராதி
  • நீதி நூல்கள் விளக்கவுரை
  • கவிஞனின் சுவைநயம்
  • பாவேந்தரின் பாநயம்
  • கம்ப சிகரங்கள்
  • புதிய திருவள்ளுவமாலை
  • அகராதி நிகண்டு
  • விசேடன விளக்கம்
  • மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது
  • பண விடு தூது( 3 நூல்கள்)
  • மூவருலா
  • பாடு மொழிப் பதினெட்டு
  • திருப்புடை மருதூர் புராணம்
  • ஒருத்துறைக் கோவை இரண்டு
  • யாப்பருங்கலக் காரிகை புத்துரை
  • சுபத்திரை கல்யாணம்
  • உமையம்மை திருப்புகழ்
  • சண்முகப் பாட்டியல் பொருத்த வினா விடை
  • கிருஷ்ண லீலை
  • கற்பகவல்லி நாயகி மாலை

விருதுகள்,பரிசுகள்

தமிழக அரசின் கபிலர் விருது(2013)