வேதா கோபாலன்

From Tamil Wiki
வேதா கோபாலன்
வேதா கோபாலன்

வேதா கோபாலன் ( 1956) தமிழ் எழுத்தாளர், இதழாளர். சோதிடர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதுபவர். குமுதம், கல்கி இதழ்களில் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

வேதா கோபாலன் 1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

விருதுகள்

வேதா கோபாலன் அமுதசுரபி நாவல் போட்டியில் ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற நாவல் பரிசுபெற்றது.

தனிவாழ்க்கை

வேதா கோபாலனின் கணவர் எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன்.

இதழியல்

வேதா கோபாலன் குமுதம் இதழில் 13 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சோதிடம்

வேதாகோபாலனின் தந்தை சோதிடர். வேதா கோபாலன் 2000 த்தில் மின்னம்பலம் இதழில் சோதிட வினாவிடை எழுதினார். அதன்பின் சோதிடபலன்கள் சொல்லி வருகிறார் .மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய இதழ்களில் வாரபலன்கள் எழுதி வருகிறார். சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதினார்

இலக்கிய வாழ்க்கை

வேதாகோபாலனின் முதல் சிறுகதை 1980 ல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. ஏறத்தாழ 850 சிறுகதைகள் எழுதியுள்ளார்.1980 ல் முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. ஐம்பது நாவல்கள் மற்றும் இருபத்தைந்து குறுநாவல்கள் வெளிவந்துள்ளன.

இலக்கிய இடம்

வேதா கோபாலன் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். தமிழ் வார இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகளையும் எழுதியுள்ளார்

நூல்கள்

ஆன்மிகம்
  • நானறிந்த ஆன்மிகம்
  • ஆன்மிகச் சிறுதுளிகள்
நாவல்கள்
  • எனக்காகவா பாபு?
  • காலத்துக்கும் நீ வேண்டும்
பொது
  • வாட்ஸப் எனும் வள்ளல்
  • வாட்ஸப்பில் வந்தவை

உசாத்துணை