ம.வே.பசுபதி

From Tamil Wiki
Revision as of 07:51, 1 April 2022 by Tamizhkalai (talk | contribs)

தமிழறிஞர் ம.வே.பசுபதி(பிறப்பு: ஆகஸ்ட் 21, 1942) தமிழறிஞர். நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம், முதுகலைப் பட்டம் படித்து, அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். ஆம் ஆண்டில் உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது. இவர் பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார்.

பிறப்பு, கல்வி

ம.வே.பசுபதி (மந்திரவேதி வேங்கடராமையா பசுபதி) கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் ஆகஸ்ட் 21, 1942 அன்று கல்வெட்டாய்வாளரும், தமிழறிஞமான கா. ம. வேங்கடராமையா வுக்கும் அன்னபூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

தனி வாழ்க்கை

கல்விப் பணி

மவே.பசுபதி தாம் படித்த திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1961 முதல் 1967 வரை அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1967 முதல் 1987 வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1988 முதல் 2001 வரை திருப்பனந்தாள் கா.சா.சு. கல்லுரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.

இலக்கியப் பணி

ம.வே.பசுபதி ஓலைச்சுவடிகளிலிருந்து 23 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 15 சிற்ரிலக்கியங்களை எழுதியுள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளிவரும் நாற்பத்தொரு நூல்கள் அடங்கிய தொகுப்புப் பதிப்பு. பழந்தமிழ் நூல்களின் மூலங்கள் பார்வையில் பாடவேறுபாடுகளுடன் வெளிவந்துள்ள இத்தொகுப்பு இந்நூற்றாண்டின் முதற்பெருந் தொகுப்பு நூலாகும்.

இப்பதிப்பு, பதப்பிரிப்புச் செய்த பதிப்பாகும். அதனால் எளிதாக்க் கற்க இயலும். சிறு முயற்சியினாலேயே பொருளுணரவும் முடியும்.

இந்நூலுக்கு திருப்பனந்தாள், இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் கவிஞர் ம.வே.பசுபதி அவர்கள் புத்துரையும் பொழிப்புரையும் எழுதியுள்ளார். நயினைமான்மியம் என்ற நூலில் இப்பாடல்களும் பொழிப்புரையும் இணைக்கப்பட்டுள்ளன.

படைப்புகள்

பெயரகராதி

நீதி நூல்கள் விளக்கவுரை

கவிஞனின் சுவைநயம்

பாவேந்தரின் பாநயம்

கம்ப சிகரங்கள்

புதிய திருவள்ளுவமாலை

அகராதி நிகண்டு

விசேடன விளக்கம்

மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது

பண விடு தூது( 3 நூல்கள்)

மூவருலா

பாடு மொழிப் பதினெட்டு

திருப்புடை மருதூர் புராணம்

ஒருத்துறைக் கோவை இரண்டு

யாப்பருங்கலக் காரிகை புத்துரை

சுபத்திரை கல்யாணம்

உமையம்மை திருப்புகழ்

சண்முகப் பாட்டியல் பொருத்த வினா விடை

கிருஷ்ண லீலை

கற்பகவல்லி நாயகி மாலை