ம.வே.பசுபதி

From Tamil Wiki

தமிழறிஞர் ம.வே.பசுபதி(பிறப்பு: ஆகஸ்ட் 21, 1942) தமிழறிஞர். நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம், முதுகலைப் பட்டம் படித்து, அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். ஆம் ஆண்டில் சென்னை, பெசண்ட் நகரிலுள்ள உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது. இவர் பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார். தற்போது கம்பன் கதை எனும் நூலினை எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

ம.வே.பசுபதி (மந்திரவேதி வேங்கடராமையா பசுபதி) கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் ஆகஸ்ட் 21, 1942 அன்று கல்வெட்டாய்வாளரும், தமிழறிஞமான கா. ம. வேங்கடராமையா வுக்கும் அன்னபூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

தனி வாழ்க்கை

கல்விப் பணி

ம்.வே.பசுபதி தாம் படித்த திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1961 முதல் 1967 வரை அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1967 முதல் 1987 வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1988 முதல் 2001 வரை திருப்பனந்தாள் கா.சா.சு. கல்லுரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.