under review

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 18:12, 31 March 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
LOGO TUN SAMBANTHAN2.jpg

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் பதிவு எண் NBD 4086. இப்பள்ளி 1937 ஆண்டு துவங்கப்பட்டது. இது ஓர் அரசின் முழு உதவி பெற்ற பள்ளியாகும்.

வரலாறு

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் பழைய சாலையில் 19வது கிலோமீட்டரில் கிளைப்பாதையாகப் பிரிந்துச்செல்லும்  பத்தாங் பெனார் நீலாய் வழியில் சுமார் 4வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. 1937 மே மாதம் 6-ம் திகதி இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பள்ளி பாஜம் தோட்டத்தில் 4 வகுப்புகளுடனும் 22 மாணவர்களுடனும் தோற்றுவிக்கப்பட்டது.

மாணவர் வருகை

மாணவர்கள் பாஜம் தோட்டம், மத்தின் தோட்டம், கெபோக் தோட்டம் மற்றும் கம்போங் பாரு பாஜவிலிருந்து இப்பள்ளிக்கு வந்தனர்.

அரசு முழு மான்யம் பெறும் பள்ளி

Untitledfc.jpg

1981 பிப்ரவரி முதல் நாளில் இப்பள்ளி கம்போங் பாரு பாஜமிலுள்ள சீனர்களுக்கு உரிமையான கட்டடத்தில் செயல்பட ஆரம்பித்தது. பின்னர், அரசு முழு மான்யம் பெறும் பள்ளியாக மாற்றியது. சுமார் 135 மாணவர்களுடன் ஏழு ஆசிரியர்களுடனும் இப்பள்ளி செயல்பட ஆரம்பித்தது.

பள்ளி பெயர்

இப்பள்ளிக்கு நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி. சம்பந்தன் பெயர் சூட்டப்பட்டது. 1982 ஜூன் 19-ம் நாள் கல்வி அமைச்சு பள்ளியைத் துன் சம்பந்தன் பாஜம் ஆரம்பத் தமிழ்ப்பள்ளி எனப் பிரகடனம் செய்தது.

இணைக்கட்டடம்

இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருந்தது. மாணவர்கள் படிப்பதற்கான வகுப்பறைகள் பற்றாக்குறையின் காரணத்தால் பள்ளி நிர்வாகம் இணைக் கட்டடம் தேவையென விண்ணப்பம் செய்தது. விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சு 3 வகுப்பறைகள், 1 மேடை அடங்கிய இணைக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தது.

புதியக் கட்டடம்

Untitledd.jpg

மாணவர்கள் எண்ணிக்கை 341 ஆக அதிகரிக்கவே புதிய கட்டடம் கோரி கல்வி அமைச்சிடம் அன்றைய பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.முனியாண்டி அவர்கள் மனு செய்திருந்ததை தொடர்ந்து கல்வி அமைச்சு 4 அடுக்கு மாடிக் கட்டடம் கட்டித்தந்தது. 1999ல் ரோஸ்லா அபிதுல்லா அவர்கள் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இப்புதிய கட்டடத்தில் பள்ளி இயங்க ஆரம்பித்தது.

உசாத்துணை

  • நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.