தமிழ்நாடு அரசியல் காலக்கோடு
தமிழ்நாடு அரசியல் (19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) என்பது பிரிடிஷாரின் வருகைக்குப் பின் ஆரம்பமானது.
வரலாறு
பிரிட்டிஷ் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது.
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
முக்கிய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள்,அம்பேத்கர் மக்கள் இயக்கம் , பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
காலக்கோடு
விடுதலைக்கு முன்
ஆண்டுகள் | கட்சி | சென்னை மாகாண முதலமைச்சர் |
---|---|---|
1920 - 1921 | நீதிக்கட்சி | சுப்பராயலு ரெட்டியார் |
1921 - 1926 | நீதிக்கட்சி | பனகல் ராஜா |
1926 - 1930 | பி.சுப்பராயன் | |
1930 - 1932 | நீதிக்கட்சி | பி. முனுசாமி நாயுடு |
1932 - 1934 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1934 - 1936 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1936 | நீதிக்கட்சி | பி.டி.ராஜன் |
1936 - 1937 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1937 | Interim provisional ministry | கர்மா வெங்கட ரெட்டி நாயுடு |
1937 - 1939 | இந்திய தேசிய காங்கிரஸ் | சி. ராஜகோபாலாச்சாரி |
1939 - 1946 | இந்திய தேசிய காங்கிரஸ் | ஜனாதிபதி ஆட்சி |
1946 - 1947 | இந்திய தேசிய காங்கிரஸ் | தெங்குட்டுரி பிரகாசம் |
விடுதலைக்குப் பின்
ஆண்டுகள் | கட்சி | முதலமைச்சர் |
---|---|---|
23 Mar 1947 06 Apr 1949 | INC | ஓ.பி. ராமசாமி ரெட்டியார் |
06 Apr 1949 26 Jan 1950 | INC | பி.எஸ். குமாரசாமி ராஜா |
26 Jan 1950 10 Apr 1952 | INC | பி.எஸ்.குமாரசாமி ராஜா |
10 Apr 1952 13 Apr 1954 | INC | சி. ராஜகோபாலச்சாரி |
13 Apr 1954 31 Mar 1957 | INC | கு. காமராஜ் |
13 Apr 1957 01 Mar 1962 | INC | கு. காமராஜ் |
15 Mar 1962 02 Oct 1963 | INC | கு. காமராஜ் |
02 Oct 1963 06 Mar 1967 | INC | எம். பக்தவச்சலம் |
06 Mar 1967 03 Feb 1969 | DMK | சி.என். அண்ணாதுரை |
03 Feb 1969 10 Feb 1969 | DMK | வி.ஆர். நெடுஞ்செழியன் |
10 Feb 1969 04 Jan 1971 | DMK | மு.கருணாநிதி |
15 Mar 1971 31 Jan 1976 | DMK | மு.கருணாநிதி |
31 Jan 1976 30 Jun 1977 | ஜனாதிபதி ஆட்சி | |
01 Jul 1977 17 Feb 1980 | AIADMK | எம்.ஜி.ராமச்சந்திரன் |
17 Feb 1980 09 Jun 1980 | ஜனாதிபதி ஆட்சி | |
09 Jun 1980 15 Nov 1984 | AIADMK | எம்.ஜி.ராமச்சந்திரன் |
10 Feb 1985 24 Dec 1987 | AIADMK | எம்.ஜி. ராமச்சந்திரன் |
24 Dec 1987 07 Jan 1988 | AIADMK | வி.ஆர்.நெடுஞ்செழியன் |
07 Jan 1988 30 Jan 1988 | AIADMK | ஜானகி ராமச்சந்திரன் |
30 Jan 1988 27 Jan 1989 | ஜனாதிபதி ஆட்சி | |
27 Jan 1989 30 Jan 1991 | DMK | மு.கருணாநிதி |
30 Jan 1991 24 Jun 1991 | ஜனாதிபதி ஆட்சி | |
24 Jun 1991 13 May 1996 | AIADMK | ஜெ. ஜெயலலிதா |
13 May 1996 13 May 2001 | DMK | மு.கருணாநிதி |
14 May 2001 21 Sep 2001 | AIADMK | ஜெ. ஜெயலலிதா |
21 Sep 2001 01 Mar 2002 | AIADMK | ஓ.பன்னீர் செல்வம் |
02 Mar 2002 12 May 2006 | AIADMK | ஜெ. ஜெயலலிதா |
13 May 2006 15 May 2011 | DMK | மு.கருணாநிதி |
16 May 2011 27 Sep 2014 | AIADMK | ஜெ. ஜெயலலிதா |
29 Sep 2014 22 May 2015 | AIADMK | ஓ.பன்னீர் செல்வம் |
23 May 2015 23 May 2016 | AIADMK | ஜெ. ஜெயலலிதா |
24 May 2016 04 Dec 2016 | AIADMK | ஜெ.ஜெயலலிதா |
06 Dec 2016 15 Feb 2017 | AIADMK | ஓ.பன்னீர் செல்வம் |
16 Feb 2017 06 May 2021 | AIADMK | எடப்பாடி கே. பழனிச்சாமி |
07 May 2021 Present | DMK | மு.க.ஸ்டாலின் |
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.