சுவைத்திரள்
From Tamil Wiki
சுவைத்திரள் (1993-2011 ) இலங்கையில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த இரு மாதத் தமிழ் இதழ். இது ஒரு கேலிச்சித்திர இதழாக வெளிவந்தது
வெளியீடு
சுவைத்திரள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சிரித்திரன் மாத இதழைப் பின்பற்றி ஒரு முழு நகைச்சுவை இதழாக வெளிவந்தது. திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் இதன் ஆசிரியராக இருந்தார். தர்மகுலசிங்கம் சிரித்திரன் ஆசிரியர் சி.சிவஞானசுந்தரம் பற்றிய தொகைநூலை வெளியிட்டவர். ஆசிரியர் சி. தர்மகுலசிங்கம் 2011 நவம்பரில் இறந்த பின்னர் இவ்விதழ் நிறுத்தப்பட்டு விட்டது. மொத்தம் 37 இதழ்கள் வெளிவந்தன
உள்ளடக்கம்
சுவைத்திரள் இதழ் நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை வெளியிட்டது . சுவைத்திரளுக்கு ஓவியங்கள், கேலிச் சித்தரங்களை சிறீ கோவிந்தசாமி வரைந்தார். இறுதி இதழ்- ஆவணி புரட்டாதி ஐப்பசி காலாண்டிதழாக 72 பக்கங்களுடன் வெளிவந்தது.