under review

தேவிமான்மியம்

From Tamil Wiki
Revision as of 16:00, 27 March 2022 by Ramya (talk | contribs)

தேவிமான்மியம் (பொ.யு. 19ஆம் நூற்றாண்டு) சோமநாதபாரதி இயற்றிய இசைப்பாடல்களும் விருத்தப்பாடல்களும் அமைந்த பாடல்கள்.

நூல் பற்றி

பொ.யு. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவநாதர் என்று அழைக்கப்படும் சோமநாதபாரதி இயற்றிய நூல். தேவி அந்தணச்சிறுமியாக வந்து தன் மேல் பாடல் பாடுமாறு வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க தேவிமான்மியம் நூலை இயற்றினார். 1911இல் பதிப்பிக்கப்பட்டது.

நூலைப் பாராட்டையவர்கள்

  • தெற்கு புதுத்தெரு நெல்லையப்ப கவிராயர்
  • சங்கர சுப்ரமணிய நாவலர்
  • யாழ்ப்பாணாம் சிதம்பர ஸ்வாமிகள்
  • மெய்கண்ட சிவமயம்
  • திருவேங்கடம் சங்கர நாராயண அய்யர்
  • திருமலைச் சாத்திரியார்
  • வேம்பத்தூர் வேங்கட சுப்ப அவதானி
  • திருவனந்தபுரம் பத்மநாப அய்யர்
  • திருவனந்தபுரம் முத்துச்சாமிப் பிள்ளை
  • இராமேச நல்லூர்ராமலிங்க ஐயர்
  • திருச்செந்தூர் குஞ்சய பாரதி

நூற்பயன் பாடல்

மாமகிட சூரன் மணிமுடியை மர்த்தனித்த
வாமவிந்தை தான வணங்கியே நேமமிகச்
செய்யமலர் சாத்தியிந்தச் செந்தமிழை ஓதுநெஞ்சே
வையகத்தே கல்வி வரும்

பாடல் நடை

பரம்சிவன் உமையாந் தேவி பங்கெனம் பெருமா னாதி
அரனுரை கயிலைக் கேகும் ஆனந்த முனிவ ரெல்லாம்
வரமுனி ஒருவன் வாழும் வண்மையாச் சிரமங் கொண்டு
வரமிகும் அவனைக் காண்போம் வருமென உடன் சென்றாரே

கண்ணுவன் செளண்டி லீயன் காத்தியா யனன்வி யாசன்
நண்ணுமத் திரியா யாசான் நாரதன் வாம தேவன்
பண்ணுறு பரத்து வாசன் பாராசரன் முதலோர் சூழ
விண்ணுலோர் புகழக் கும்பன் விந்தையாய் வரவுங் கண்டே

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.