being created

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே) (ஜே. கிருஷ்ணமூர்த்தி) (மே 11, 1895 - பிப்ரவரி 17, 1986) சிந்தனையாளர். குரு, அமைப்பு, வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் அல்லாத ஆன்மிகப் பாதையையும், அதற்கு மாற்றாக மனிதனின் சுதந்திரச் சிந்தனையையும் வலியுறுத்தியவர். தத்துவ அறிவு, உளவியல் கூறுமுறைகள், அறிவார்ந்த பகுப்பாய்வுகள் ஆகியவற்றை நிராகரித்தார். யாவற்றையும் கூர்ந்து நோக்குவதன் வழியாக உண்மையை அறியலாம் என்றும் உண்மை என்பது பாதையல்லாத நிலம் என்பதையும் தன் உரைகளின் மையமாகச் சொன்னார்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி

வாழ்க்கைக் குறிப்பு

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூரிலுள்ள மதனப்பள்ளி எனும் கிராமத்தில் பிறந்தார். 1909-ல் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை தியோசபிகல் சொசைட்டியில் கிளார்க்காக பணியாற்ற வேண்டி குடும்பத்துடன் சென்னையிலுள்ள அடையாருக்கு வந்தார். மார்ச் 6, 1910-ல் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட்டால் தத்தெடுக்கப்பட்டார். எதிர்கால தியொசபிகல் தலைவராக அறிவிக்கப்பட்டார். பதினைந்து வயதில் அன்னிபெசண்ட் மற்றும் நித்யாவுடன் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் பத்து வருடங்கள் கல்வி கற்றார். தியானத்தன்மை சார்ந்த பயிற்சிகள் செய்தார். ஐரோப்பா முழுவதும் விரிவான பயணங்கள் செய்தார்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஆன்மிக வாழ்க்கை

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் முப்பத்தி மூன்றாவது வயதில் தியாசபிகல் சொசைட்டியினர் இவர்தான் உலகின் ஆசான் என உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினர். நெதர்லாந்தில் ஒரு பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேடைக்கு வந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி "நான் இந்த உலகத்திற்கு ஆசான் இல்லை, நான் ஒன்றுமில்லாதவன்" என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் தியாசபியிலிருந்து வெளியேறி பொதுக்கூட்டங்களில் மக்களிடையே பேசினார். ”ஒரு குருவை சார்ந்து இருக்கக் கூடாது” என்பது பேச்சில் எப்போதும் வலியுறுத்தினார். எந்த ஒரு கொள்கை மூலமும் உண்மையை உணர முடியாது என நம்பினார். அன்றாட வாழ்வில் ஒருவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் அவர் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறினார்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மக்களிடம் உரையாற்றினார். பெரும்பாலும் மக்களின் கேள்விகளுக்கான பதில்கள் வழியாக உரையாற்றினார். அவருடைய பதில்கள மரபார்ந்த அறிவின் துணை கொண்டு அல்லாமல் இருந்தது. அவர் ஒரு குருவாக செயலாற்ற மறுத்தார். யாருக்கும் எந்த ஒரு செயல்முறைக்கும் தீட்சை வழங்கவோ, எந்த ஒரு வழிமுறையையோ, செயல்முறையையோ வழங்க மறுத்தார்.

அமைப்புப் பணிகள்

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன்

துவக்கத்தில் தியோசோபிகல் சொசைட்டியின் உலக வழிகாட்டியாக நிறுத்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி அந்த நிறுவன அமைப்பையே கலைத்தார். தியோசபிகல் நிறுவன அமைப்புகளை விட்டு வெளியேறினார். 1968-ல் கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் டிரஸ்டாக பதிவு செய்யப்பட்டது. நாற்பது ஏக்கரில் இங்கிலாந்தில் ஹாம்ப்ஷையரில் கிருஷ்ணமூர்த்தி செண்டரை 1987-ல் ஜிட்டு திறந்து வைத்தார். அவரைப் பின்பற்றியவர்கள் ஆன்மிகப்பயணங்கள் வருவதற்கான தங்கும் விடுதிகள், நூல்கங்கள் அமைக்கப்பட்டன. நெருக்கடி தரும் ரெஜிமெண்ட் பள்ளிமுறைகளுக்கு மாற்றாக ஓரளவு சுதந்திரமான கல்வி பயிலும் சூழலை உருவாக்கும் மாற்றுக்கல்வி முறையை உருவாக்க நினைத்தார். இங்கிலாந்தில் Brockwood Park School, Inwood Small School ஆகிய கல்விச்சாலைகளை உருவாக்கினார்.

எழுத்து

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ”At the Feet of the Master” என்ற புத்தகத்தை தன் பதினான்கு வயதில் எழுதினார். அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்தன.

மதிப்பீடு

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

தமிழ் இலக்கியத்தில், அறிவுத்துறையில் எழுபது எண்பதுகளில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளின் தாக்கம் இருந்தது.

”இந்த மனிதர் மிக நேர்மையானவராக இருந்தார். அவரின் நேர்மை அவரைச் சுற்றிலும் பொங்கி பிரவகித்துக் கொண்டிருந்தது. இந்த மனிதரின் தூய்மையான நேர்மை தவிர்க்கவே முடியாததாக இருந்தது. அவர் பேசும்போது வெறுமனே இது, இது மற்றும் இது என்றே பேசுவார். "அந்த இது என்ன?" என்று கேட்டால் அதற்கு அவர், "இதுதான் இது" என்பார், ஏனென்றால் அவர் எந்த ஒரு வழிமுறையையோ, எந்த ஒரு எடுத்துக்காட்டையோ, எந்த ஒரு உவமையையோ, நகைச்சுவையையோ பயன்படுத்த மறுத்தார். இது வெறுமே அறிவுக்கூர்மையை கொண்டு பிரித்துப் பார்ப்பதாக இருந்தது. இதுதான் தூய்மையான ஞானமார்க்கம். ஞானமார்க்கம் என்றால் அறிவின் பாதை. அவர் ஒரு அற்புதமான மனிதர், ஆனால் அவர் ஒரு மலரை போல வாழ்ந்து, மலரைப் போலவே உதிர்ந்தார். அவர் எங்கே இருந்தாரோ, அங்கே ஒரு நறுமணம் இருந்தது. அவர் நீங்கியதும், புத்தகங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனென்றால் உயிரோட்டமான செயல்முறை என எதுவுமில்லை.” என அவரை இளவயதில் நேரில் சந்தித்த சத்குரு ஜகி வாசுதேவ் குறிப்பிட்டார்.

நூல் பட்டியல்

(இது முழுமையான பட்டியல் இல்லை)

  • The Awakening of Intelligence
  • Freedom from the Known
  • Think on These Things
  • Happy Is The Man Who Is Nothing
  • Meditations
  • Education and the Significance of Life
  • The First and Last Freedom
  • Commentaries on Living – 1
  • Commentaries on Living – 2
  • Commentaries on Living – 3
  • Educating the Educator
  • Choiceless Awareness
  • What does Fear do to You?
  • AN INTRODUCTION TO THE TEACHINGS
  • This Light in Oneself – True Meditation
  • On God
  • On Relationship
  • On Fear
  • On Love and Loneliness
  • Krishnamurti On Education
  • Krishnamurti to Himself: His Last Journal
  • What are you Doing with your Life?
  • Whole Movement of Life is Learning
  • The Ending of Time
  • Don’t Make A Problem of Any Thing
  • Life Ahead
  • The Network of Thought
  • School without Fear
  • The Life and Death of Krishnamurti
  • As One Is
  • The Book of Life
  • Reflections on the Self
  • Truth and Actuality
  • Surely, freedom from the self … is the true function of man
  • MAN IS NOT THE MEASURE
  • Tradition and Revolution
  • The First Step is the Last Step
  • The Seed of a Million Years
  • In the light of silence all problems are dissolved

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.