second review completed

சந்திரா தர்மலிங்கம்

From Tamil Wiki
Revision as of 20:13, 10 March 2024 by Tamizhkalai (talk | contribs)

சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் 'நாடகமும் அரங்கியலும்' துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளர்.

நாடக வாழ்க்கை

சந்திரா தர்மலிங்கம் பல்கலைக்கழத்தில் 'சாகுந்தலம்', '9.0', 'பட்டதாரிகள்பாடு', 'துன்பமுதூறும் அயலார்' ஆகிய நாடகங்களிலும் 'இணையும் அலைகள்', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்தார். 'சகிர்தயம்' என்ற மேடை நாடகத்தை நெறியாள்கை செய்தார். நாடகப் பிரதிகளை எழுதி 'மாற்றம்' என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். நாடக ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

விருதுகள்

  • சந்திரா தர்மலிங்கம் சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளைப் பெற்றார்.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.