உடையார்
From Tamil Wiki
உடையார் ( ) பாலகுமாரன் எழுதிய வரலாற்று நாவல். ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய பின்புலத்தில் சோழர்கால வாழ்க்கைமுறை, மதம் ஆகியவற்றை பேசுபொருளாக்கி எழுதப்பட்டது
எழுத்து,வெளியீடு
இந்நாவலின் முதல் பகுதி இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. ஆறுபகுதிகள் கொண்ட இந்நாவலில் எஞ்சியவை நேரடியாக நூல்வடிவம் பெற்றன. பாலகுமாரன் இந்நாவலை சொல்லி பதிவுசெய்து எழுதவைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
உசாத்துணை
https://eluthu.com/view-nool-vimarsanam
http://abiappa.blogspot.com/2009/10/1.html