under review

சித்தி றபீக்கா

From Tamil Wiki
Revision as of 16:48, 27 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})

சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

அமைப்புப் பணிகள்

சித்தி றபீக்கா தேனகம், படர்க்கைகளின் இணையம் அமைப்புகளில் இலக்கிய செயற்பாட்டாளராக ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. வற்றாத ஈரம் எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • வற்றாத ஈரம்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.