under review

எம்.எம். பைசல்

From Tamil Wiki
Revision as of 14:07, 27 February 2024 by Ramya (talk | contribs)
எம்.எம். பைசல்

எம்.எம். பைசல் (முகமது பைசல்) (பிறப்பு: ஜனவரி 6, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், குறும்பட இயக்குனர்.

பிறப்பு, கல்வி

எம்.எம். பைசல் குமரிமாவட்டம் தக்கலையில் A.முகம்மது அபுபக்கர், காசறாபீவி(லைலா) இணையருக்கு ஜனவரி 6, 1979-ல் பிறந்தார். பூர்வீகம் தேங்காய்பட்டணம். அரசு மேல் நிலைப் பள்ளி தக்கலையில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

எம்.எம். பைசல் V. பர்சானாவை ஜூலை 13, 2011-ல் மணந்தார். மகன்கள் முகமது சயான், முகமது அசான், கனான் அபுபக்கர். எம்.எம். பைசல் கட்டிட ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார்.

அமைப்புப் பணிகள்

எம்.எம். பைசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலைக் கிளைச் செயலாளர்.

இலக்கிய வாழ்க்கை

எம்.எம். பைசலின் முதல் கவிதை தொகுப்பு அக்டோபர் இராவணன் மீசை 2012-ல் வெளியானது. இவரின் படைப்புகள் திணை, புனைவு, காலச்சுவடு, நீட்சி, புனைக்களம் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. ஆதவன் தீட்சண்யா, வைக்கம் முகம்மது பசீர், அ. மார்க்ஸ், தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் , தோப்பில் முகமது மீரான் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

திரை வாழ்க்கை

எம்.எம். பைசல் குறும்படங்கள் பல இயக்கினார். இவரின் முதல் குறும்படம் "ஆழத்தாக்கம்" 2006-ல் வெளியானது.

இயக்கிய குறும்படங்கள்
  • ஆழத்தாக்கம்
  • காட்சிப் பிளவு
  • நிறம்
  • கடல் உலகிலேயே தனிமையாது
  • மீன்பாடு
  • மீன் கதைகள்
  • இலைகள் உலகம்
  • கண்ணாடிச் சொல்லும் கதைகள்

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • இராவணன்மீசை (ஒளிவெள்ளம் பதிப்பகம்)
  • வாப்பாவின் மூச்சு (காலச்சுவடு பதிப்பகம்)
  • பூமியின் அகதி (கீற்று பதிப்பகம்)




Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.