under review

எம்.எம். பைசல்

From Tamil Wiki
Revision as of 12:16, 27 February 2024 by Ramya (talk | contribs)
எம்.எம். பைசல்

எம்.எம். பைசல் (முகமது பைசல்) (பிறப்பு: ஜனவரி 6, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், குறும்பட இயக்குனர்.

பிறப்பு, கல்வி

எம்.எம். பைசல் குமரிமாவட்டம் தக்கலையில் A.முகம்மது அபுபக்கர், காசறாபீவி(லைலா) இணையருக்கு ஜனவரி 6, 1979-ல் பிறந்தார். பூர்வீகம் தேங்காய்பட்டணம். அரசு மேல் நிலைப் பள்ளி தக்கலையில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

எம்.எம். பைசல் V. பர்சானாவை ஜூலை 13, 2011-ல் மணந்தார். மகன்கள் முகமது சயான், முகமது அசான், கனான் அபுபக்கர். எம்.எம். பைசல் கட்டிடத் தொழில் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எம்.எம். பைசலின் முதல் கவிதை தொகுப்பு அக்டோபர் இராவணன் மீசை 2012-ல் வெளியானது. இவரின் படைப்புகள் திணை, புனைவு, காலச்சுவடு, நீட்சி, புனைக்களம் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. ஆதவன் தீட்சண்யா, வைக்கம் முகம்மது பசீர், அ. மார்க்ஸ், தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் , தோப்பில் முகமது மீரான் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

திரை வாழ்க்கை

எம்.எம். பைசல் குறும்படங்கள் பல இயக்கினார். இவரின் முதல் குறும்படம் ஆழத்தாக்கம் 2006-ல் வெளியானது.

இயக்கிய குறும்படங்கள்
  • ஆழத்தாக்கம்
  • காட்சிப் பிளவு
  • நிறம்
  • கடல் உலகிலேயே தனிமையாது
  • மீன்பாடு
  • மீன் கதைகள்
  • இலைகள் உலகம்
  • கண்ணாடிச் சொல்லும் கதைகள்

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • இராவணன்மீசை (ஒளிவெள்ளம் பதிப்பகம்)
  • வாப்பாவின் மூச்சு (காலச்சுவடு பதிப்பகம்)
  • பூமியின் அகதி (கீற்று பதிப்பகம்)




Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.