being created

சச்சின்

From Tamil Wiki
Revision as of 17:26, 26 February 2024 by Ramya (talk | contribs)

சச்சின் (பிறப்பு: ஜூன் 23, 1987) தமிழில் எழுதிவரும் கவிஞர்.

பிறப்பு, கல்வி

சச்சின் புதுக்கோட்டையில் செல்லதுரை, மேகலா இணையருக்கு ஜூன் 23, 1987-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. புதுக்கோட்டை ஆலங்குடி அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வி கற்றார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (மின் மற்றும் மின்னணு பொறியியல்) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சச்சின் அக்டோபர் 25, 2009-ல் லோகேஸ்வரியைத் திருமணம் செய்தார். மகன் LS.துரை மேகலைவன், மகள் LS.தனிஷ்தா.

இலக்கிய வாழ்க்கை

சச்சினின் படைப்புகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தன. இவரின் முதல் படைப்பு "ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்” 2017-ல் வெளியானது. ஆதர்ச எழுத்தாளர்களாக அ. முத்துலிங்கம், ஆதவன், ஜெயமோகன், ஷோபா சக்தி, கந்தர்வன், நகுலன், தேவதச்சன், வெய்யில், இசை ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.