பூவரசு(ஜெர்மனி)
From Tamil Wiki
Revision as of 19:41, 24 February 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பூவரசு (1991) ஜெர்மனியிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ். ஜெர்மனியின் இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாகத் தொடங்கியது. இதன் ஆசிரியர் இந்து மகேஷ். தற்போது ஆண்டுக்கு இரண்டாக வெளிவருகிறது....")
பூவரசு (1991) ஜெர்மனியிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ். ஜெர்மனியின் இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாகத் தொடங்கியது. இதன் ஆசிரியர் இந்து மகேஷ். தற்போது ஆண்டுக்கு இரண்டாக வெளிவருகிறது.
தோற்றம்
புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்ட இந்தப் பூவரசு சஞ்சிகைக்கு இருக்கிறது.சஞ்சிகையின் செயற்பாடுகளாக ஒவ்வோர் ஆண்டும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஆண்டு நிறைவை ஒட்டிய விழா கொண்டப்பட்டு அந்த விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
இருமாதத்துக்கு ஒன்றாக வெளிவந்த சஞ்சிகை 2006 முதல் ஆண்டுக்கு இரண்டாக வெளிவருகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.