அரிச்சந்திர புராணம்

From Tamil Wiki
Revision as of 10:17, 22 March 2022 by Tamizhkalai (talk | contribs)

அரிச்சந்திர சரித்திரம் என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் புராணம் அன்று காப்பியம்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இது வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

இதன் ஆசிரியர் 'நல்லூர் வீரன் ஆசு கவிராசர்' என அழைக்கப்பட்டவர்.இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்’. இவரைக் ‘கவிராசர்’ எனச் சிறப்புப்பெயரால் அழைப்பர்.  ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர்.

ஆசிரியர்

"அரிச்சந்திர புராணம்" என்னும் இந் நூலை இயற்றியவர் நல்லூர் வீரகவிராயர் என்பவர். இவர் பாண்டி மண்டலத்தில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள நெல்லூரிற் பிறந்து வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. முற்காலத்தில் இவ்வூர் 'குலோத்துங்க சோழ நல்லூர்' எனப் பெயர் பெற்றிருந்ததுபோலும். இவருடைய குலம் பொற்கொல்லர் குலம். அந்நாளில் அந்நாட்டுப் பொற்கொல்லர் யாவரும் காளி வழிபாட்டிற் சிறந்து, தங்கள் குலதெய்வமெனக் காளிதேவியைக் கொண்டாடி வந்தனர். அக்குலத்திற் பிறந்த காரணத்தால் இவரும் காளியை வணங்கி அத்தெய்வத்தின் திருவருள் கைவரப் பெற்றார். அதனாற் செந்தமிழ் மொழிப் புலமையிற் சிறந்து கவி பாடும் ஆற்றலும் இவர்பால் அமைந்தது 'வீரன்' என்பது இவரது பிள்ளைத் திருப்பெயர். கவி பாடிப் புகழ்பெற்ற பின்பு 'கவிராயர்' என்ற பட்டம் பெற்றனர். வீரகவிராயர் என்றே அழைக்கப்பட்டார். 'ஆசுகவி' என்பதும் ஒரு பட்டப் பெயர்போலும்.

கதிதருசீர் நல்லூர்வாழ் வீரன் ஆசுகவிராசன் கவியரங்கம் ஏற்றி னானே"

என்ற சிறப்புப்பாயிர வடிகள் அதனைத் தெளிவாக விளக்குகின்றன.

ஆசுகவி பாடுவது மிகவும் அரிய செயலாம். இன்ன எழுத்து. இன்ன இடத்தில் வரவேண்டும்; இன்ன சொல் இன்ன இடத்தில் வரவேண்டும்; இன்ன பொருள் அமைந்திருக்கவேண்டும்; இன்ன கவி பாடவேண்டும்; இன்ன அணி யமைந்திருக்கவேண்டும்; இத்தனை விநாடியிற் பாடவேண்டும் என்று அறிஞர் கூறியபடி அவையிலிருந்து பாடுவது 'ஆசுகவி' என இலக்கணங் கூறும்.

நூல்

வீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,

  1. விவாக காண்டம்
  2. இந்திர காண்டம்
  3. வஞ்சனைக் காண்டம்
  4. வேட்டஞ்செய் காண்டம்
  5. சூழ்வினைக் காண்டம்
  6. நகர் நீங்கிய காண்டம்
  7. காசி காண்டம்
  8. மயான காண்டம்
  9. மீட்சிக் காண்டம்
  10. உத்தர காண்டம்

என்னும் பத்துக் காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1215 பாடல்கள் உள்ளன.