under review

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை( பொ.யு. 17-ம் நூற்றாண்டு) சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலின் அம்மையாகிய சிவகாமியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இரட்டை மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல்.

ஆசிரியர்

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். அவர் தில்லையில் தங்கியிருந்து வழிபட்ட நாட்களில் எழுதப்பட்டது இந்நூல்.

நூல் அமைப்பு

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை இரட்டைமணிமாலை என்னும் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்திற்கேற்ப நேரிசை வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆகிய பாவகைகளின் அமைந்த 20 பாடல்களில் அந்தாதியாக அமைந்தது. இரு பாவகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு மணிமாலை போல் அமைகின்றன.

சிவகாமியன்னையின் அழகும், அருளும் பாடப்படுகின்றன.

பாடல் நடை

நேரிசை வெண்பா

கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று
மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்
டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர்
மயிலிருக்கத் தில்லை வனத்து. 9

கட்டளைக் கலித்துறை

வன்னஞ் செறிவளைக் கைச்சிற
காற்றன் வயிற்றினுள்வைத்
தின்னஞ் சராசர வீர்ங்குஞ்
சணைத்திரை தேர்ந்தருத்திப்
பொன்னம் பலத்துளொ ரானந்த
வாரிபுக் காடும்பச்சை
அன்னம் பயந்தன கொல்லாம்பல்
லாயிர வண்டமுமே. 10

உசாத்துணை

தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, சென்னை நூலகம்


✅Finalised Page