being created

கிரேஸ் சடகோபன்

From Tamil Wiki
Revision as of 14:02, 16 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "கிரேஸ் சடகோபன் (பிறப்பு: பிப்ரவரி 2, 1959) ஈழத்துப் பெண் ஆளுமை, கல்வியாளர். == வாழ்க்கைக் குறிப்பு == கிரேஸ் சடகோபன் இலங்கை கொழும்பு ஹெவ்லொக் டவுனில் ஆபிரகாம் ஜோசப், எஸ்தர் காலமணி இணையர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கிரேஸ் சடகோபன் (பிறப்பு: பிப்ரவரி 2, 1959) ஈழத்துப் பெண் ஆளுமை, கல்வியாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கிரேஸ் சடகோபன் இலங்கை கொழும்பு ஹெவ்லொக் டவுனில் ஆபிரகாம் ஜோசப், எஸ்தர் காலமணி இணையருக்கு பிப்ரவரி 2, 1959-ல் பிறந்தார். கொழும்பு வெள்ளவத்தை சென் கிளேயர்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாக பயின்று இளமாணிப்பட்டத்தைப் பெற்றார். கல்வித்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவம் என்பவற்றிலும் பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

ஆசிரியராகவும் முதல்தர அதிபராகவும் நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணியாளராக பணியாற்றினார்.

கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாட அலகின் உதவிக் கல்விப் பணியாளராக பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றி பாடசாலைகளில் தமிழ் மொழி பாடம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இவர் வலய மட்டம், அகில இலங்கை ரீதியில் தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டிகளை வருடாந்தம் வெற்றிகரமாக நடத்தி மாணவ மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டு வந்ததோடு தமிழ் மொழிப் பாட பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களையும் செய்த இவர் பல செயலமர்வுகளையும் நடாத்தினார். கிரேஸ் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். சிங்களம், ஆங்கில கதைகள் பலவற்றை தமிழில் மொழிப்பெயர்த்தவை விஜய் என்ற சிறுவர் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான புவியியல் வரலாற்றுக் கட்டுரைகள் பலவற்றையும் தொடர்ந்து எழுதியுள்ளார். கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவால் வருடந்தோறும் வெளியிடப்படும் கூர்மதி எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். கல்வி அமைச்சியில் தொடர்ச்சியாக தமிழ் சஞ்சிகை ஒன்று வெளிவருவதற்கு பேருதவியாக கிரேஸ் இருந்துள்ளார்.

அரச சாகித்திய விருது பெற்ற பண்டார மெருவன் (பண்டாரவைக் கொன்றவர்கள்) என்ற சிங்கள நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். கல்வி அமைச்சின் விசேட தேவையுடையவர்களுக்கான கிளையில் ஒரு வளவாளராகவும் செயற்பட்டுள்ளார்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

நூல் பட்டியல்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.