being created

கமலேஸ்வரி சதாசிவம்

From Tamil Wiki

கமலேஸ்வரி சதாசிவம் (பிறப்பு: பிப்ரவரி 9, 1950) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கமலேஸ்வரி சதாசிவம் இலங்கை முல்லைத்தீவு சிலாவத்தையில் செல்லையா, மாரிமுத்து(தாய்) இணையருக்கு பிப்ரவரி 9, 1950-இல் பிறந்தார். முல்லைத்தீவு சிலாவத்தை பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். புலமைப்பரிசில் தேர்ச்சியடைந்தார். முல்லைத்தீவு சைவப்பாடசாலையில் இடைநிலைக் கல்வி கற்றார். உயர்தரம் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கற்றார்.

அமைப்புப் பணிகள்

2002-2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிலாவத்தை மாதர் சங்கத் தலைவியாக இருந்துள்ளார். இக்காலப் பகுதியில் போர்க்கால சூழலில் மக்களுக்கு முன்னின்று பல உதவிகளை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

கமலேஸ்வரி சதாசிவம் சிறுகதை, கட்டுரை கவிதை எழுதினார். இவரின் படைப்புகள் ஈழநாதம் பத்திரிகையிலும் புலிகளின் குரல் வானொலியிலும் வெளிவந்தன. போராளிகளினால் வெளியிடப்படும் வானம்பாடி நூலில் நினைவுகள் தொடரும் என்ற தலைப்பில் இவரின் சிறுகதை இடம்பெற்றது.

விருதுகள்

  • மன்னார் மாவட்ட மாதர் சங்க இணையம் இவருக்கு சிறந்த எழுத்தாளர் விருதை வழங்கியது.

நூல் பட்டியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.