being created

தேவன்

From Tamil Wiki
Revision as of 19:51, 13 February 2024 by ASN (talk | contribs) (Being created by ASN)
Devan
தேவன்

Being Created by ASN

தேவன் (ஆர். மகாதேவன்) (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) ஆனந்த விகடன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். ஆனந்தவிகடனின் பெருவெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர். தன் நகைச்சுவை எழுத்தால் புகழ் பெற்றவர். பொது வாசிப்புக்காக ஆனந்த விகடனில் பல தொடர்கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன், கோமதியின் காதலன் உள்ளிட்ட பல நாவல்களை எழுதி உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, இளமை

திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். இயற்பெயர் மகாதேவன். திருவிடைமருதூரி இருந்த திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஒரு ஆண்டு பள்ளி ஆசிரியராக இருந்தார். தேவன் எழுதிய "மிஸ்டர் ராஜாமணி" என்ற ஒரு புனைவைப் படித்துவிட்டு அப்போது ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரை ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக சேர்த்துக் கொண்டார் (1933). கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையை விட்டு விலகியபோது (1942) தேவன் நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றார். தன் இறப்பு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். இந்தக் காலகட்டத்தில் அவருடைய தொடர்கதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தின. 500 சிறுகதைகளுக்கு மேலும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், 20க்கும் மேலான தொடர்கதைகளையும் எழுதினார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.