being created

கமலா தம்பிராஜா

From Tamil Wiki
Revision as of 14:59, 13 February 2024 by Ramya (talk | contribs)

கமலா தம்பிராஜா (பிறப்பு: மே 12, 1944) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கமலா தம்பிராஜா இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையில் தம்பிராஜா, நேசம்மாமே இணையருக்கு 1944-இல் பிறந்தார். கொழும்பு, கனடா ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்டவர். கலைப்பட்டதாரி. கனடாவில் குடியேறினார்.

ஊடக வாழ்க்கை

கனடா ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காடசியில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். ரொறன்ரோ தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலிய வானொலிகளில் செய்திகளைத் தொகுத்து வாசித்தார். இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர், இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர், இலங்கையின் முதலாவது தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சி தயாரிப்பாளர், முதலாவது மின் ஊடகத்தில் திரைப்படத்தில் நடித்த முதலாவது பெண் ஊடகவியலாளர், அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்கு வந்து செய்தி வாசித்த பெண் ஊடகர்.

இலக்கிய வாழ்க்கை

கமலா வீரகேசரியில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி பிரசுரமாக ’நான் ஓர் அனாதை’ என்ற நாவலை வெளியிட்டார். வீரகேசரி ஆசிரியர் பீடம், தகவல் திணைக்களம், ஈரானிய தூதரகம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

மறைவு

கமலா தம்பிராஜா பிப்ரவரி 7, 2018-இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நான் ஓர் அனாதை (நாவல்)

உசாத்துணை

  • ஆளுமை:கமலா, தம்பிராஜா: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.