நித்ய கன்னி (நாவல்)

From Tamil Wiki
நன்றி-காலச்சுவடு பதிப்பகம்

நித்ய கன்னி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் ஒரு பெண்ணை மட்டும் மையப்படுத்தி எழுதிய நாவல். மகாபாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையாக வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை.

என்றும் நித்தியகன்னியாகவே இருக்கும் அவளின் வரமே அவள் வாழ்வில் குறுக்கிடும் ஆண்களால் சாபமாக மாறும்போது ஏற்படும் விளைவுகளே இப்புதினம். பெண்னின் உடலும் மனமும் தர்மத்தின் பெயரால் மிகக் கொடுமையாக சாத்வீக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை புராண காலப் பின்னணியில் சித்தரிக்கும் நாவல்.

ஆசிரியர்

ஆசிரியர் எம்.வி.வெங்கட்ராம் (1920-2000)தமிழின் முக்கியமான நாவலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர். மணிக்கொடி இலக்கியக் குழுவின் உறுப்பினர். அவரது காதுகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் . இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் பலநூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.