under review

புஷ்பராணி இளங்கோவன்

From Tamil Wiki
தமிழ்ப்பிரியா

புஷ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா) (முத்தையா புஷ்பராணி) (1952 – மே 7, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூகப்பணியாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

புஷ்பராணி இளங்கோவன் யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் சி. முத்தையா, பரமேசுவரி இணையருக்கு 1952-இல் பிறந்தார். ஏழாலை (சுன்னாகம்) எனும் கிராமத்தில் பிறந்த தமிழ்ப்பிரியா ஏழாலை சன்மார்க்க வித்தியாசாலையிலும், மல்லாகம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் தனியார் கணக்குப் பரிசோதகர் காரியாலயம் ஒன்றில் கணக்குப் பதிவாளராகவும் பணிபுரிந்தார். திருமணத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கணவர் இளங்கோவனுடன் தற்பொழுது வசித்து வருகிறார்.

சமூகப்பணி

புஷ்பராணி இளங்கோவன் மனிதநேயச்செயற்பாடுகள், தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபட்டார். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

புஷ்பராணி இளங்கோவன் தமிழ்ப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வருபவர். 1970ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல், இசையும் கதையும், கவிதை ஆகியவை எழுதி வருகிறார். ஈழநாடு, சிந்தாமணி, சுடர், இந்திய சஞ்சிகைகள் இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கை, தினகரன், வீரகேசரி, ஈழமுரசு நாளிதழ் மல்லிகை, சிரித்திரன், கலாவல்லி, அமிர்தகங்கை ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளது. குங்குமம் வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத் தயாரித்தவர்.

மறைவு

புஷ்பராணி இளங்கோவன் மே 7, 2020-இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • காம்பு ஒடிந்த மலர் (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.