தரையில் இறங்கும் விமானங்கள்
தரையில் இறங்கும் விமானங்கள் ( ) இந்துமதி எழுதிய நாவல்.
எழுத்தும் வெளியீடு
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது
கதைச்சுருக்கம்
கதைநாயகன் விஸ்வம். அவனுடைய அண்ணன் பரசு. அவனுடைய அண்ணி ருக்மிணி அவனுக்கு அறிவுத்தோழியாக இருக்கிறாள். விஸ்வம் இலக்கியம், இசை என ரசனையான வாழ்க்கையை வாழவேண்டுமென விரும்புபவன். அவனுடைய அம்மாவின் மறைவு அவனை வாழ்க்கையின் துயரை வலுவாக உணரச்செய்கிறது. அண்ணனுடைய வேலை மாற்றலாகிறது. விஸ்வம் யதார்த்தவாழ்க்கையின் பொறுப்புகளை சுமந்தேயாகவேண்டிய நிலை உருவாகிறது
இலக்கிய இடம்
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியின் சிறந்த படைப்பு என கருதபடுகிறது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது