being created

கும்பகோணப் புராணம்

From Tamil Wiki

கும்பகோணப் புராணம்(பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சோழ நாட்டிலுள்ள கும்பகோணம் என்னும் தலத்தைப் பாடிய நூல். சொக்கப்ப புலவரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

கும்பகோணைப் புராணத்தை இயற்றியவர் கொக்கநாதப் புலவர். சின காஞ்சி சென்று கிருத கம்பளப் பூசை செய்தால் பயனுண்டென்று கூறுவதாலும் , தொண்டை நாட்டு அரசூர் சொக்கன் என்று தன்னைக் கூறிக் கொள்வதாலும் , இவர் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர் என அறிகிறோம். சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். . இவரது ஆசிரியர் இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.

அவமொழித் தென்னுள்ளத் தமுத மூறுதீஞ்

சுவையெனத் தமிழ்வளஞ் சுரந்து நல்குமே

தவமெனக் கமலையி லிருந்த தேசிகன்

தவவணை வயித்திய நாதன் றாள்களே

நூல் அமைப்பு

நைமிசாரணியச் சிறப்புரைத்த அத்தியாயம்

நைமிசாரண்யம், சிவபெருமான் தன் அருள் பெட்டகத்தைத் திறந்தாற் போன்றது; முனிவர்களின் உறைவிடம் ; ஞான பூமி.அங்கு சூத மாமுனிவர் வந்தார். சிவ ரகசியம் என்ற நூலைப்பற்றி முனிவர்களுக்குக் கூறத் தொடங்கினார்.

திருக்கயிலாயச் சிறப்புரைத்த அத்தியாயம்

கைலாச மலையின் சிறப்பு கூறப்படுகிறது. அங்குள்ள நாகணப் பறவைகள் ஆகமத்துக்குப் பொருள் கூறுவன போல் குரலெழுப்பின. அதனைக் கேட்டுக் காகங்கள் மகிழ்ந்தன. வேங்கை , சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் தவம் இயற்றுகின்றன . அம் மலையின் ஒளியால் சூரிய ஒளி மின் மினியின் ஒளி போன்றிருக்கின்றது. அகந்தை தீர்ந்தவர்கள் ஆரவாரம் ஆகிய ஓசைகள் கேட்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கயிலையில் நந்தியம் பெருமான் கையில் பிரம்பு கொண்டு உடன்வர அரியணை மீது உமையோடு வந்து சிவபெருமான் அமர்ந்தார்.

கும்பகோணச் சிறப்புரைத்த அத்தியாயம்

உமையம்மை சிவனிடம் உலக உயிர்கள் வினை நீங்கிப் முக்தியடைவதற்குரிய தலம் எது?" என்று கேட்டதற்கு சிவன் கும்பகோணமே அதற்கான தலம் எனக்கூறி அதன் பெருமைகளைப் பின்வருமாறு கூறுகிறார்.

கும்பகோணத்தை காவிரியு, அரிசிலாறும் சுற்றி வருகின்றன. அந்நகர் செல்வ வளம் மிக்கது. கும்பகோணத்தில் மாந்தாதா , கும்பலிங்கப் பூசை புரிந்ததன் பயனாக , உலகை ஒரு குடைக்கீழ் ஆண்டான் அவன் ஆட்சியில் புலியும் பசுவும் ஒன்றாக நீரருந்தின . மாளவ நாட்டு மன்னன் சத்திய கீர்த்தி, பிரம்மஹத்தி தோஷத்தை இந் நகரத்துக் காசிப தீர்த்தத்தில் மூழ்கித் தீர்த் துக்கொண்டான். சோமலிமங்கார்ச்சனையால் சந்திரன் தன் உடல் நோய் நீங்கி வளம் பெற்றான், குபேரன் சிவனுக்குத் தோழனாகி, அலகாபுரிக்குத் தலைவனானான். மயனால் தன் ஒளியை இழந்த சூரியன் மீண்டும் ஒளி பெற்றான். சக்கராயுதம் வேண்டி விஷ்ணு ஆயிரம் மலர்களால் அர்ச்சனை செய்யும்போது அவற்றுள் ஒன்று குறையத் தன் கண்ணைப் பறித்து வழிபாடு செய்தான். கும்பம் சாய்ந்தபோது அதிலிருந்து அமுதம் பொங்கி எழுந்து அந்த இடம் பொற்றாமரைக்குளமாயிற்று. சோமயாகத்தின் பலனாக மகாமகக்குளம் உண்டாயிற்று . அக்குளத்துள் அச்சுவ தீர்த்தம் , அழல் தீர்த்தம் முதலான பல தீர்த்தங்களுண்டு . கங்கை முதலான தீர்த்தங்கள் ஒன்று சேந்தது போன்ற அதனுள் ஒருமுறை முழுகினால் பாவம் போகும் . பன்னிரெண்டாண்டுக்கு ஒரு முறை அங்கு மகாமகம் என்னும் விழா நடக்கும்.

சிவபூசை யுபகரணங் கூறிய அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் சிவபூசை செய்யும் முறை கூறப்படுகிறது.

காலையில் இறைவனுக்குத் திருமஞ்சனம்(அபிஷேகம்) செய்து, வெண்ணீறு சந்தனம் பூசி, தூய ஆடை அணிவித்து எருக்கு போன்ற மலரால் வழிபட வேண்டுமென்று சாபால உபரிடதம் கூறுகிறது. அதன்பின் நிவேதனம்(படைப்பு). அதன்பின் தீபம் அருக்கியம் கொடுத்து ஐந்தெழுத்தை நூற்றெட்டு முறை ஜபிக்க வேண்டும் . இடக் காலைத் தரையில் மடித்துச் சதா சிவத்தை அபிமுகமாக நோக்கி அவன் திருப் பெயர்களைச் சொல்லி பிழை பொறுக்க வேண்டி, நீரை பூவொடு விட்டு வில்வத்தால் மூன்று முறை தொட்டுச் சத்தியோஜாதம் முதலிய முகங்களைச் சொல்லி ஜெபித்து மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தைப் பலமுறை சொல்ல வேண்டும். நோயற்ற வாழ்வை வேண்டி தீர்த்தம் பருக வேண்டும்.

மாலையில் தீர்த்தக் கரையில் மூத்த பிள்ளையாரைத் தொழுது “ சம்பு கேசாய நம : ” “ சிவாய நம : ” என்று மும் முறை சொல்லி ஆசமனம் செய்யவேண்டும் . பின் பிராணாயாமம் செய்து திருநீறணிந்து அக்கமணி புனைந்து அந்தி தொழ வேண்டும்.

ஐப்பசி கார்த்திகையில் தாமரை மலரால் வழிபாடு செய்தால் வீடுபேறடைவர். மார்கழியில் வெள்ளெருக்கு மலரால் வழிபட்டால் பொன்விமானம் மீது வானில் பொலிவர் ஆறு பெரும்பொழுதுகளிலும் முப்பதாயிரம் முறை மலரால் வழிபாடு செய்பவர் தாம் விரும்புபவற்றைப் பெறுவர்.

சிவபுண்ணியம் உரைத்த அத்தியாயம்

சிவாலயத்தில் நெய் விளக்கேற்றல், அடியார் சேவை போன்றவை செய்பவர் சிவலோகம் செல்வர் . அகிற்புகை , குங்கிலியப்புகை முதலியன கொண்டு வழிபாடு செய்பவன் பிறவாமை எய்துவான் . ஆலயத் தில் வண்ணம் தீட்டுதல் , சுதையால் துலங்கவைத்தல் , யாழ் குழல் முதலிய கொண்டு இறைவனை மகிழவைத்தல் செய்கிற வர்கள் கருவிடை எய்தார் . . ஆலயத்தில் அலகிட்டு மெழு கிட்டு உழவாரத் தொண்டு முதலிய செய்கிறவர்கள் , சிவலோ கஞ் சேர்வர் . கும்ப மாதத்தில் 1 கிருதகம்பளத்தால் வழிபாடு செய்பவர் சிவசாயுச்சம் பெ

கிருதகம்பள விதி கூறிய அத்தியாயம்

(கிருத கம்பளம்-நெய்யனால் நனைக்கப்பட்ட கம்பளம்)

மெல்லிய ஆடையில் நெய்யை உருக்கி நனைத்து, மாலையில் காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதன் முன் வைத்து, நெய்ய்யுடன் பல பண்டங்களைப் படைத்து கிருதகம்பளத்தை அழகுறச் சார்த்தி , கற்பூர ஆரத்தி செய்து “ கங்கையலம்பும் வேணியா! ” என்று சொல்லி , இரவெல்லாம் துயில் நீத்து வைகறை எழுந்து நாட்கடனை முடித்து சிவனடியாருக்கு உணவளிக்க வேண்டும். இப்பூசை மாசிமாத முழுநிலவில் செய்தல் நன்று. பூசையால் புத்தியும் முத்தியும் பெருகும். செல்வமும் புகழும் சேரும் . பாபம் போகும் .

சுமேதா என்பவன் வெறுமை நீங்க கோதம முனிவரின் சொல்படி கிருதகம்பள பூசை செய்து பலன் பெற்றான்.

சீதகும்பமும் திலபூசையும் உரைத்த அத்தியாயம்

சித்திரை முதல் ஆவணி யீறாகவுள்ள மாதங்களில் இறைவனுக்கு இடையீடு படாமல் , நல்ல நீரில் மணப் பொருள்கள் சேர்த்துத் திருமஞ்சனமாட்டி மலர்கொண்டு வழிபட்டால் செல்வம்மிக்கு நல்வாழ்வும் வினையினீங்கி முத்தியும் கிடைக்கும்.எள்ளினால் பூசை செய்வேனென்று சங்கல்பம் செய்து கொண்டு ,பாலால் திருமஞ்சன மாட்டிப் பாலமுதோடு முக்கனிகளையும் நிவேதித்து , அருக்கியம் கொடுத்துப் பங்குனித் திங்களில் எள்ளினால் பூசை செய்யவேண்டும் . சித்திரைத் திங்கள் வளர்பிறை நவமியோடு கூடிய நாளிலும் கிரகண காலத்தும் எள்ளினால் வழிபாடு செய்தால் நாம் செய்த தீவினைபோம் ; தென்புலத்தார்க்குச் செய்யும் பயனுமுண்டாகும்

சிவனாம மகிமை உரைத்த அத்தியாயம்

நிதம் எனும் நாட்டில் , தீயவனாய அந்தணன் ஒருவன் பக்திமானாகிய் அந்நாட்டரசனை கொல்லும்பொருட்டு வில்லுடன் அந்தப்புரத்தில் நுழைந்தான். உறங்கிக்கொண்டிருந்தவன் விழித்து அந்தணனைக் கண்டு கொல்லச் சென்றான். அந்தணன் சிவனடியார்போல் நடித்து இறவனின் நாமத்தைப் பாட ஆரம்பிக்க, அரசன் சிவனடியாரைக் கொல்லத் துணிந்ததை எண்ணி வருந்தி, அந்தணனை வணங்கி மரியாதை செய்தான். இறைநாமத்தின் மகிமை உணர்ந்த அந்தணன் மனம் திருந்தி உண்மையான பக்தனானான்.

வாணலிங்க மகிமை உரைத்த அத்தியாயம்

அவற்றுள் வாணன் வாணலிங்கம் நர்மதை ஆற்றிலிருக்கிறது. அவ்வாற்றின் தீர்த்தங்கொண்டு அந்த லிங்கத்தை வழிபட்டால் சிவ பதவி பெறுவர் என்று அகத்தியர் ஓர் சிவயோகிக்கு உபதேசித்த வரலாறு. வழிப்பறி செய்யும் வேடனொருவன் வாணலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்து வந்தான். அவனால் வழிப்பறிக்காகக் கொல்லப்பட்டவர்களும் அவன் சிவனடியாராதலால் நற்கதி அடைந்தனர். அருமுறை கொடிய அந்தணன் ஒருவனை வேடன் வாணலிங்கத்தால் அடித்துக்கொல்ல, வாணலிங்கத்தால் அடிபட்டதால் யமன் அவன் சிவலோகம் செல்லத் தக்கவன் என்று கூறினான். வாணலிங்கத்தின் மகிமை அத்தகையது.

வேடன் கதிபெற்ற அத்தியாயம்

நர்மதைக் கரையில் லிங்க வழிபாடு செய்த வேடனொருவன் அவ்வழியே வந்த அந்தணர்களை லிங்கத்தால் அடித்துக்கொன்று அவர்களின் குருதியால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து உடல்களை வில்வத்தால் மூடினான். தண்டிக்க வந்த அரசனின் படையால் வனைக் கொல்ல முடியவில்லை. சிவன் அவர்கள் முன் தோன்றி வேடன் சிவவழிபாடு செய்ததால் நற்கதி பெறுவான் எனக் கூறி மறைந்தார்.

வாணலிங்க மகிமை கூறிய அத்தியாயம்

வாணலிங்கார்ச்சனையால் பிறவிக்கடல் கடக்கலாம். வல்வினைபோம். இன்பத்துறையில் இழிந்தவர்க்கெல்லாம் நன்மருந்து . பொறாமை முதலிய தீக்குணங்களில்லார்க்கே இவ்வழிபாடு கிட்டும் . இதற்கிணையானது வேறெதுவுமில்லை . ஆதலால் சிவனையே பதியாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

  • பதி நிர்ணயங் கூறிய
வாணலிங்கத் தரிசனம் உரைத்த அத்தியாயம்

வாணலிங்க பூஜை செய்த அந்தணனொருவன் முனிவரின் சொல் கேட்டு தன் பாவங்கள் நீங்கப்பெற்ற கதை.

சிவயோக விரதம் உரைத்த அத்தியாயம்
  • சிவசரிதம் கூறிய
  • அபராதங் கூறிய
  • விபூதி மகிமை கூறிய
  • கலிவிடம்பன்
  • காசியின் சிறப்புரைத்த
  • கும்பகோணச் சிறப்புரைத்த
  • பிரமன் மாயனைக் கண்ட
  • மாயன் சிவபூசை மகிமை கூறிய ,,
  • சிவபத்தர் மகிமை கூறிய
  • சிவயோகியைக் கண்ட
  • சிவபூசை விதி கூறிய அத்தியாயம்
  • பிரதக்கண விதி கூறிய
பூசைக் குபகரணங் கூறிய அத்தியாயம்

பூசை செய்பவன் கிழக்கு முகமாக இருத்தல் வேண்டும் . அக்கமாலை விபூதியணிதல் வேண்டும் . தூய்மையான நீரில் மணப்பொருள்கள் சேர்த்து , அகங்குளிர நோக்கிச் சதாசிவத்தையெண்ணி , உருத்திரம் செபித்துக்கொண்டு , அந்நீரை அபிஷேகம் செய்ய வேண்டும் . வெள்ளிய தூய ஆடையால் திருமேனியை ஒற்றவேண்டும் . பால்போன்ற ஆடையை அணிவித்து நீறு பூசி முந்நூல் சார்த்தித் தொழ வேண்டும் . நல்ல மலரை அவன் திருவடிகளில் சார்த்தவேண்டும். வில்வமில்லாத பூசனைப் பயனற்றது.

காப்புச் செய்யுள்களெனக் கருதத்த

இந்நூல் , கும்பகோணச் சிறப்பையெடுத்து விரிவாகக் கூறுவது . சிறப்பியல்பாகவமைந்தவை , கும்பேசர்கோயில் , நாகேசர்கோயில் , மகாமகக்குளம் - என்ற மூன்றுமேயாம் . குடமூக்கென்பது திரிந்து கும்பகோணமாயிற்றென்கின்றனர் யாகம் செய்தபோது , யாகத்தில் வைத்திருந்த கும்பம் சாய்ந்ததால் கும்பகோணம் என்றபெயர் வந்ததென்பதனை இந்நூலாலறியலாம் . இவ்வாறே ஒவ்வொரு பொருளுக்கு முள்ள பெயர்க்காரணத்தை இதனுள் காணலாம் . சங்ரன் என்ற சொல் மங்களத்தைச் செய்பவன் - என்ற பொருளில் வழங்குகிறது.

இந்நூலுள் , இவரால் வற்புறுத்திப் பேசப்படுவன: திருநீறு , உருத்திராக்கம் , வில்வம் , இலிங்க வழிபாடு ஆகிய வையேயாம் . கும்பகோணச் சிறப்புரைத்த வத்தியாயம் , வாணலிங்கமகிமை கூறியவத்தியாயம் , என்னும் இருவத்தி யாயங்களின் தலைப்புக்கள் இரட்டித்துக் கூறப்பட்டுள்ளன . ஆனால் அவற்றுள் சொல்லப்பட்ட செய்திகள் வெவ்வேறாக வுள்ளன .

இவர் சோமசூத்திர வழிபாட்டு முறையென்ற கடுமையான வழிபாட்டு முறை ஒன்றும் குறிப்பிடப்படுகிறது.ஒன்றையும் கூறுகிறார் . அது மிகவும் கடுமை யான வழிபாடாகத் தெரிகின்றது . அந்தமுறை புதியதன்று. பழமையானதுதான் . இச்சோமசூத்திர முறையை பிரதக்கண விதி கூறிய அத்தியாயத்தில் கூறுகின்றார் . அது கடுமை யானதாக இருப்பினும் பின்பற்றவேண்டியதவசியம் .

பாடல் நடை

சிவபூசை உபகரணம்

கானிடை நட்ட மாடுங் கண்ணுதல்

கமலத் தாளின்

மானிடர் மாட ராசி வழங்குமர்ச்

சனையிற் கோடி

தானுவந் தளிக்கும் வில்வம் தறுகிளை

யொன்று சாத்தில்

ஏனையர்ச் சனைக டானும் வில்வத்துக்

கிணையொப் பாகும்

வாணலிங்கச் சிறப்பு

பரசிவ முருவதுவே வாணலிங்க

வுருவமெனப் பகர நாளும்

திரமுறவே தொட்டாலு மதிபாவ

கோடிகளுஞ் சிந்தையுமம் மயமாக்கும்

வரமுறுமச் சிவலிங்கந் தொடவருதல்

கிட்டாது மருவுமார்பிற் காதல்

வரமல கமெனக் கற்றவர்க்குங்

கிடையாத கதியைக் காட்டும்

வேடன் கதிபெற்றது

பாற்றினஞ் சுழலும் வெற்றிப் பரசுபா

ணியனே போற்றி ! நீற்றொளி பழுத்த மேனி நின்மலா

போற்றி ! திங்கள் கீற்றொளிர் பவள வேணிக் கேடிலாப்

பொருளே ! போற்றி ! தோற்றமு மீறு மில்லாச் சூழ்சுடர்

மூர்த்தி ! போற்றி



உசாத்துணை

கும்பகோணப் புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்

கும்பகோணப் புராணம்-சொக்கப்ப புலவர், ஆர்கைவ் வலைத்தளம்





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.