சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை

From Tamil Wiki

சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை (டிசம்பர் 10, 1905 -1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் என்ற ஊரில் (நவக்கிரக தலங்களில் சூரிய வழிபாட்டுத் தலம்) குப்புஸ்வாமி பிள்ளை - பார்வதி அம்மாள் இணையருக்கு டிசம்பர் 10, 1905 அன்று நாராயணஸ்வாமி பிள்ளை பிறந்தார்.

முதலில் பந்தணைநல்லூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையிடம் வாய்ப்பாட்டு கற்றார். கீர்த்தனைகள் வரை கற்ற பின்னர் நாராயணஸ்வாமி பிள்ளைக்கு நாதஸ்வர இசையில் அதிக ஈடுபாடு இருப்பதை உணர்ந்த தந்தை தானே பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

தனிவாழ்க்கை

நாராயணஸ்வாமி பிள்ளைக்கு நான்கு தம்பிகள் - கோவிந்தஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்), ராமுப்பிள்ளை, சரபமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்), ஸ்வாமிநாத பிள்ளை (நாதஸ்வரம்), ஒரு தங்கை தர்மாம்பாள்.

இசைப்பணி

நாராயணஸ்வாமி பிள்ளை முதலில் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் இணைந்து வாசிக்கத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்குப் பின் தனியே கச்சேரிகளில் வாசிக்கலானார். தன் கடைசித் தம்பியும் தனது மாணவருமாகிய ஸ்வாமிநாத பிள்ளையுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்திருக்கிறார்.

மறைவு

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013