வீரபாண்டியன் மனைவி

From Tamil Wiki
Revision as of 18:45, 28 January 2024 by Jeyamohan (talk | contribs)
வீரபாண்டியன் மனைவி

வீரபாண்டியன் மனைவி (1959 ) அரு.ராமநாதன் எழுதிய வரலாற்றுநாவல். தமிழில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

வீரபாண்டியன் மனைவி நாவலை அரு. ராமநாதன் அவரே நடத்திவந்த காதல் என்னும் இதழில் 1953 முதல் 1959 வரை தொடராக எழுதினார். அந்நாவல் 1960 ல் அரு.ராமநாதன் நடத்திவந்த பிரேமா பிரசுரம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

வரலாற்றுப்பார்வை

’சரித்திரக் கதைகள் நம் முன்னோர்களுடைய வரலாற்றை அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. இன்றைய மக்களின் இயல்பை அறிமுகப்படுத்த அவர்கள் எந்த இனத்தின் பரம்பரை என உணர முடிகிறது. சமூகப் புதினத்தைப் படிப்பதால் தனி மனிதன் உணர்ச்சி-அதாவது வாழ்க்கை உணர்ச்சியைப் பெறமுடிகிறது. ஆனால், சரித்திர நாவல்கள் நாட்டுணர்ச்சியை உண்டாக்குகிறது' என்று அரு.ராமநாதன் தன் அணுகுமுறையை விளக்குகிறார்

கதைச்சுருக்கம்

பொயு 1180 ல் சோழ பேரரசர் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியனின் இரண்டாம் மனைவி நந்தினி ஓரு பேரழகி என கேள்விப்பட்டு அவளை அடையும்பொருட்டு மதுரைமேல் படையெடுத்துவந்து மதுரையை அழித்து வீரபாண்டியனை கொலைசெய்கிறார். தன் கட்டுப்பாட்டில் அமைந்த விக்ரம பாண்டியனை அரசனாக்குகிறார். வீரபாண்டியனின் மனைவி நந்தினி எப்படி சோழர்களை தோற்கடிக்கிறார், அதற்கு படைத்தலைவர் ஜனநாதன் எப்படி உதவுகிறார் என்று இந்நாவல் விவரிக்கிறது. ஜனநாத கச்சிராயன் என்னும் படைத்தலைவனின் கதாபாத்திரம் அரசியல் சிக்கல்களைப் பேசுவதுபோல அமைந்துள்ளது. மூன்று பாகங்கள் கொண்ட இந்நாவலின் நாவலின் பகுப்புகள் கம்பராமாயணத்தின் தலைப்புகளுடன் அமைந்துள்ளன.

மதிப்பீடுகள்

வீரபாண்டியன் மனைவி கம்பராமாயணத்தின் மறுவடிவம் போல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மதிப்பிடும் சாரு நிவேதிதா அந்நாவலை ஒன்றுக்கு அடியில் இன்னொரு கதை அமைந்த ஒரு palimpsest நாவல் என மதிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

உசாத்துணை