being created

விஜய ராவணன்

From Tamil Wiki
Revision as of 06:03, 26 January 2024 by Ramya (talk | contribs) (Created page with "விஜய ராவணன் (பிறப்பு: டிசம்பர் 18, 1986) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். == வாழ்க்கைக் குறிப்பு == விஜய ராவணன் திருநெல்வேலி பாளையங்கோட்டைய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விஜய ராவணன் (பிறப்பு: டிசம்பர் 18, 1986) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

விஜய ராவணன் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாதவன், மீரா இணையருக்கு டிசம்பர் 18, 1986-இல் பிறந்தார். உடன்பிறந்தவர் தங்கை. பாளையங்கோட்டை சின்மையா வித்யாலையில் பள்ளிக்கல்வி கற்றார். நேஷனல் எஞினியரிங் கல்லூரியில் பொறியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

விஜய ராவணனின் முதல் படைப்பு நிழற்காடு 2021-இல் வெளியானது. இவரின் படைப்புகள் திணை, அமிர்தா, கல்குதிரை, நடுகல், கணையாழி, குறி, கனலி, தமிழினி , அகழ், ஓலைச்சுவடி, வனம், அரூ, வாசகசாலை, படைப்பு, நடு, யாவரும், இருவாச்சி, காணிநிலம் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகின. இயந்திரவியல் பொறியாளராக, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றிவருகிறார்.

விருதுகள்

  • சிறுவாணி வாசகர் மையம், குமுதம்கொன்றை, கலை இலக்கியப் பெருமன்றம், அரூ, கனலி, யாவரும் நடத்திய போட்டிகளில் விஜய ராவணனின் படைப்புகள் தேர்வாகிப் பரிசுகள் பெற்றன.

இலக்கிய இடம்

நூல் பட்டியல்

நாவல்
  • பச்சை ஆமை (2023, சால்ட்)
சிறுகதைத்தொகுப்பு
  • நிழற்காடு (2021, சால்ட்)
  • இரட்டை இயேசு (2023, எதிர் வெளியீடு)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.