being created

ச.வி. சங்கர நாராயணன்

From Tamil Wiki
Revision as of 10:04, 25 January 2024 by Ramya (talk | contribs) (Created page with "ச.வி. சங்கர நாராயணன் (பிறப்பு: மே 28, 1989) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == ச.வி. சங்கர நாராயணன் சிவகங்கையில் விஸ்வநாதன், சீதா இணையருக்கு மே 28, 1989-இல் பிறந்தார். உடம்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ச.வி. சங்கர நாராயணன் (பிறப்பு: மே 28, 1989) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ச.வி. சங்கர நாராயணன் சிவகங்கையில் விஸ்வநாதன், சீதா இணையருக்கு மே 28, 1989-இல் பிறந்தார். உடம்பிறந்தவர் ஒரு சகோதரர். மணப்பாறை லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றார். பிஷப் ஹெபர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ச.வி. சங்கர நாராயணன் மார்ச் 27, 2023-இல் லஷ்மியை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ச.வி. சங்கர நாராயணனின் முதல் தொகுப்பு ”விறலி” 2022-இல் வெளியானது. இவரின் சிறுகதைகள் பதாகை, சொல்வனம், நடுகல், யாவரும், வாசகசாலை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • விறலி (2022)

உசாத்துணை

  • சங்கரின் சிறுகதைத் தொகுதி 'விறலி': கார்த்திக் பலசுப்ரமணியன் முன்னுரை.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.