இரா.சாரங்கபாணி

From Tamil Wiki

இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகஸ்ட் 23, 2010) தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர்.

பிறப்பு,கல்வி

இரா.சாரங்கபாணி சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடியில், செப்டெம்பெர் 18, 1925 அன்று இல் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தவர்..

தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் ,சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று புலவர் பட்டமும்(1947),பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர். முதுகலை (1955),எம்.லிட்(1962), முனைவர்பட்டம்(1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்

தனி வாழ்க்கை

ஜூன் 15, 1949 அன்று குடிமூலை என்ற ஊரில் தனலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். அவரது மகன் அந்துவன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராக தொழில் செய்கிறார்.

கல்விப்பணி

1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்று, . பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உயர்ந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.இருப்த்ஹ்ண்டுகளுக்கு மேல் வ.சுப. மாணிக்கனாருடன் பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. அவர் எழுதிய பல நூல்களுக்கு அடித்தளம் அமையக் காரணமாய் இருந்தவர் வ.சுப மாணிக்கனார் அவர்கள்.

1982-86 நான்றாண்டுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியேற்று, தமிழ் இலக்கியத்துறைத் தலைவராக உயர்ந்தார்.

1988-'94- அண்னாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூற் குழுவில் பாடங்களை வடிவமைத்தவர்.

தமிழக மற்றும் கேரளப் பல்கலைக்கழகங்களில் இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன், சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் ஆகியவை பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

இலக்கியப் பணி

  • தமிழ்ப் பல்கலைக்கத்தில் ஆசிரியப்பணி புரிந்த சமயம் சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்(இரு தொகுதிகள்) எழுதி வெளியிட்டார்.
  • காரைக்குடித் தமிழ் சங்கத்தில் துணைத் தலைவராக பல சங்க இலக்கிய வகுப்புகள் நடத்தியளித்தார்.
  • சிதம்பரம் தில்லைத் தமிழ் மன்றத்தில் மூன்றாண்டுகள் திருக்குறள் வகுப்புகளும், புறநாநூற்று வகுப்புகளும் நடத்தியுள்ளார்.
  • யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இறப்பு

ஆகஸ்ட் 23, 2010 அன்று சாரங்கபாணி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உயிர்நீத்தார்

படைப்புகள்

  • இயற்கை விருந்து(1962)
  • குறள் விருந்து(1968)
  • பரிபாடல் திறன்(1972)
  • A critical Study of Paripatal(1984)
  • A Critical Study of Ethical Literature in Tamil(1984)
  • சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
  • திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
  • திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
  • திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
  • திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
  • சங்கச் சான்றோர்கள்(1993)
  • வள்ளுவர் வகுத்த காமம்(1994)
  • புறநானூற்றுப் பிழிவு(1994)
  • மாணிக்கச் செம்மல்(1998)
  • திருக்குறள் இயல்புரை(1998)
  • சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
  • திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
  • சங்கத்தமிழ் வளம்(2003)
  • பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
  • சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
  • சங்க இலக்கியப்பிழிவு(2008)
  • திருக்குறள் செம்மொழிப்பதிப்பு
  • பரிபாடல் செம்மொழிப்பதிப்பு

பரிசுகள்,விருதுகள்

  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பரிபாடல் திறன்(1975), மாணிக்கச்செம்மல்(1999)
  • பெரும்புலவர் பட்டம் - குன்றக்குடி ஆதீனம் (1981)
  • திருக்குறள் பொற்கிழி- ,ஶ்ரீராம் நிறுவனம்(1991)
  • திருக்குறள் விருது-தமிழக அரசு(1998)
  • தமிழ்ப்பேரவைச்செம்மல் -மதுரை காமராசர் பல்கலைக்கழகம்(2000)
  • அழகப்பா கல்லூரியில் அவரது மாணவராக இருந்த சுப.வீரபாண்டியன் தன் 'வந்ததும் வாழ்வதும்' என்ற நூலில் "சாரங்கபாணியார் செய்தது ஆசிரியத் தொழில் அன்று, ஆசிரியத் தொண்டு" என்று குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

அறிஞர் இரா.சாரங்கபாணியின் தமிழ் வாழ்வு-முனைவர் மு.இளங்கோவன்

சுப.வீரபாண்டியன் - வந்ததும் வாழ்வதும் (தன் வரலாற்று நூல்)




.