பாலமுருகனடிமை சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 22:34, 12 January 2024 by Jeyamohan (talk | contribs)
பாலமுருகனடிமை
பாலமுருகனடிமை சுவாமிகள்

பாலமுருகனடிமை சுவாமிகள் ( ) தமிழ் சைவத்துறவி. முருகபக்தர். தமிழகத்தில் ஆற்காடு அருகே உள்ள ரத்னகிரி என்னுமிடத்தில் பாலமுருகன் கோயிலை நிறுவி நடத்தி வருபவர். தமிழறிஞர், திருக்குறள் புரவலர் என்னும் வகைகளிலும் மதிக்கப்படுபவர்

வாழ்க்கைக்குறிப்பு

பாலமுருகனடிமை சுவாமிகள் வாய்பேசாதவர். 1967ல் இளைஞராக கைவிடப்பட்டுகிடந்த இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் சென்று அமர்ந்தார் என்றும் அப்போது ஞானம் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. பொயு 14 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் நிறுவியதாகச் சொல்லப்படுக்ம் சிற்றாலயம் அங்கிருந்தது. 1980ல் அதை பாலமுருகனடிமை சுவாமிகள் செப்பனிட்டு விரிவாக்கி கட்டினார். இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்கோலமாகவும் துறவியாக குருகோலத்திலும் இரு சன்னிதிகளில் கோயில்கொண்டிருக்கிறார். விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருது

திருக்குறளுக்காகவும் தமிழுக்காகவும் ஆற்றிய பணிகளுக்காக பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது

உசாத்துணை