கனகசபைப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:36, 10 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)

கூ. கனகசபைப்பிள்ளை (1901) இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்கள் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட ‘வருண சிந்தாமணி’ என்ற நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கனகசபைப்பிள்ளை தொண்டைமண்டலம் கூடலூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் பி.ஏ பட்டம் பெற்ற கனகசபைப்பிள்ளை சென்னை அரசின் கணக்கராக பணியாற்றினார்.

நூல்

கனகசபைப்பிள்ளை இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்களை ஆராய்ந்து ‘வருண சிந்தாமணி’ என்ற நூலை எழுதினார். வருண சிந்தாமணிக்கு சி.சுப்பிரமணிய பாரதியார் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கிறார்.

விமர்சனம்

வருணசிந்தாமணி என்ற நூலின் வழியாக கனகசபைப்பிள்ளை தன் சொந்த குலமான வேளாளர் குலம் மற்ற குலங்களைவிட மேன்மையானது என்று காட்டிக்கொள்கிறார் என தமிழக நாட்டாரியல் ஆய்வராளரான நா.வானமாமலை ’தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை