under review

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது

From Tamil Wiki
Revision as of 22:57, 23 December 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited: Link Created: Proof Checked.)

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்று. அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாகக் கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது

வெற்றிகரமான புதிய யுத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகள் ஆகியவற்றைச் செயலாக்கியதன் மூலம், பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடுத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோர் ஆகியவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது ரூபாய் இரண்டு லட்சம் வெகுமதி கொண்டது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது பெற்றவர்கள்

2020 ஆம் ஆண்டு
  • தமிழக அரசு கருவூலத்துறை
  • சென்னை மாநகராட்சி
  • தமிழக அரசு வேளாண்துறை
2021 ஆம் ஆண்டு
  • கிண்டி கிங்க்ஸ் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி
  • சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் ராவணன்
  • சேப்பாக்கம் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன்
2022 ஆம் ஆண்டு
  • திருவள்ளூா் மாவட்ட ஆட்சியர்
  • செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகம்
  • திண்டுக்கல் மாவட்டம்
  • சிவகங்கை மாவட்டம்
  • திருநெல்வேலி மாவட்டம்
  • வேளாண்மைத் துறை தலைமை பொறியியல் துறை
  • சென்னை பெருநகர காவல் ஆணையரகம்
2023 ஆம் ஆண்டு
  • கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்
  • கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்
  • சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன்
  • கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்
  • தமிழக மின் ஆளுமை முகமை

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.