being created

ஷோப்பனோவர்

From Tamil Wiki
Revision as of 15:39, 21 December 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஷோப்பனோவர் (Arthur Schopenhauer) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய சிந்தனையாளர். தத்துவவியலாளர். அவருடைய தத்துவத்தின் தாக்கம் தல்ஸ்தோயிடம் வெகுவாக காணப்பட்டது. அவரோடு தல்ஸ்தோய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஷோப்பனோவர் (Arthur Schopenhauer) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய சிந்தனையாளர். தத்துவவியலாளர். அவருடைய தத்துவத்தின் தாக்கம் தல்ஸ்தோயிடம் வெகுவாக காணப்பட்டது. அவரோடு தல்ஸ்தோய் பலவாறு உடன்பட்டார். அப்போது “இலட்சியவாதம் அல்லது கருத்துமுதல்வாதம்” (Idealism) பற்றி ஜெர்மனியில் பல்வேறு தத்துவ விவாதங்கள் உருவாகி வந்தன. பல்வேறு தத்துவவியலாளர்களின் நிரை ஜெர்மனியில் எழுந்துவந்தது.

இம்மானுவேல் காண்ட், ஹெகல், ஷோப்பனோவர் போன்றவர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். பெரும்பாலான தத்துவ விவாதங்கள் மனித இருப்பு, மரணம், கடவுள் பற்றிய கேள்விகளை ஆராயத் துவங்கின. அவற்றை விளக்க முற்பட்டன.

ஷோப்பனோவர் தனது ‘The world as will and representation’ என்கிற புத்தகத்தில், “தூய பெரும் பாவம் என்பது மனிதனின் இருப்பே” என்கிறார். இம்மானுவேல் காண்ட்டின் “மீறுநிலை இலட்சியவாதத்தை”, தனது “விழைவு” (Will) என்ற கருதுகோளை முன்வைத்து விளக்கி ஷோப்பனோவர் மறுக்கிறார்.

ஆனால், காண்ட்டின் “அது அதுவாகவே” கருத்தை ஷோப்பனோவர் வேறுவிதமாக மறுக்கிறார். “அது அதுவாகவே” இருக்கும் நிலையை மனிதன் உணர்ந்துகொள்ள (அறிந்துகொள்ள) முடியாது என்கிற இம்மானுவேல் காண்டின் கருத்தை, “இல்லை, அப்படி இல்லை. அறிந்துகொள்ள முடியும்” என்ற தனது வாதத்தை, ‘The world as will and representation’ என்கிற நூலில் நிறுவுகிறார். இவருமே நம் பெளத்த மெய்மையை அணுகி வருவதை உணரலாம்.

ஷோப்பனோவர் “Will” என்கிற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். அதனை, “அடிப்படை விழைவு, இச்சை, ஆசை” என்று கொள்ளலாம். காண்ட்டின் “அது அதுவாகவே” இருக்கும் இருப்பென்பது இத்தகைய “விழைவு”களால் நிறைந்த ஒன்று. அவ்விழைவின் வெவ்வேறுபட்ட பிரதிநிதிகள்தான் நாம். இந்த உலகத்தின் அத்தனை பொருட்களுமே அந்த “விழைவின்” பிரதிநிதிகளாய் (Representation) இருக்கின்றன. மனிதனின் காமம், குரோதம், மோகம் எல்லாம் இந்த விழைவுகளின் விளைவுதான். மனிதனை முற்றுப்பெறாத விழைவுகளின் தொகுதியாக உருவகிக்கிறார் ஷோப்பனோவர்.

மனிதனின் துயரத்தை, தனது “விழைவு” கருத்தாக்கம் வாயிலாக எடுத்துரைக்கிறார். விழைவு காரணமாக “இச்சையும் ஆசையும்” பெருகுகிறது. அதன் காரணமாய் “துயரம்” நேர்கிறது. வாழ்க்கையே வெறும் துயரக் களஞ்சியம், துயரத்திற்கும் வெறுமைக்குமான ஊசல். ஏனென்றால், அது அடிப்படையில் இச்சை வெளியில் இயங்குவது என்ற அவநம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வந்தடைகிறார்.

ஷோப்பனோவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். அவரைப் பொறுத்தவரை, மரணம் என்பது மீட்சியில்லை. வீடுபேறு இல்லை. வெறும் விடுதலை மட்டுமே. விழைவுகளில் இருந்து, துயரங்களில் இருந்து. மகிழ்ச்சியே கூட ஒரு எதிரீவு நிலைதான் என்கிறார். பின்னர் எப்படித்தான் ஆசுவாசத்தினை தேடிக்கொள்வது? அவர் அதற்கு “கலையையும் பேரன்பையும்” முன்வைக்கிறார். சக உயிர்களிடம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணி, கொஞ்ச காலத்திற்கேனும் நம் விழைவுகொள்ளும் வீரியத்தைக் கட்டுப்படுத்தி வைக்கும்.

உசாத்துணை

  • விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம்: ஷோப்பனோவர்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.