நவ திருப்பதிகள்

From Tamil Wiki
Revision as of 23:07, 20 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நவ திருப்பதிகள்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள ஒன்பது  திருமால் திருத்தலங்கள் நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகிறன. இத்தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளைக் கொண்டவை. இக்கோயில்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை.