திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை
திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை (1892 - 1972) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
சொக்கலிங்கம் பிள்ளை 1892 ஆம் ஆண்டு ஸ்வாமிநாத நட்டுவனார் - கண்ணம்மையார் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
பாபநாசம் கிருஷ்ணமூர்த்தி நட்டுவனாரின் மகள் ஆயிப் பொன்னம்மாள் என்பவரை சொக்கலிங்கம் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு பெண்கள்:
- சுப்பிரமணிய பிள்ளை (தவிற்கலைஞர்)
- ராஜரத்தினம் பிள்ளை (நாதஸ்வரக் கலைஞர்) - தேசபந்து ராஜரத்தினம் பிள்ளை எனப் புகழ் பெற்றவர்
- முருகய்யா பிள்ளை (நாதஸ்வரக் கலைஞர்)
- கண்ணம்மாள் (கணவர்: தவிற்கலைஞர் திருக்காட்டுப்பள்ளி முருகையா பிள்ளை)
- ராஜம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்காட்டுப்பள்ளி நாகநாத பிள்ளை, முருகையா பிள்ளையின் சகோதரர்)
தனிவாழ்க்கை
சொக்கலிங்கம் பிள்ளையின் தாய் கண்ணம்மையார் ’தஞ்சை நால்வர்’ எனப்படுபவர்களில் சிவானந்தம் என்பவரின் மகன் வழிப் பேத்தி. தந்தை ஸ்வாமிநாத நட்டுவனார் பரதக்கலை வல்லுனர், மிருதங்கக கலைஞர்.
இசைப்பணி
சொக்கலிங்கம் பிள்ளை ராகத்தின் ஸ்வரூபத்துக்கு குறைவில்லாது பொருத்தமான சங்கதிகளுடன் முறையான கீர்த்தனைகளை வாசித்தவர்.
முழுநேர வீணைக்கச்சேரி செய்யுமளவுக்கு வீணையிலும் தேர்ச்சி பெற்றவர்.
மாணவர்கள்
திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- தன் மகன்கள்
- நடராஜசுந்தரம்
- கணேசன்
திருத்துறைப்பூண்டி டாக்டர் கே. ஷண்முகம் பிள்ளையின் மனைவி இவரிடம் வீணை பயின்றவர்களில் ஒருவர். தன்னைத் தேடிவந்த பல இசைக்கலைஞர்களுக்கு கீர்த்தனைகள் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளைடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை
- மன்னார்குடி நடேச பிள்ளை
- திருக்காரவாயில் கோபாலபிள்ளை
- ராஜாமடம் கோவிந்தப் பிள்ளை
- ஒரத்தநாடு நாராயணசாமி பிள்ளை
மறைவு
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013