second review completed

ரொமிலா தாப்பர்

From Tamil Wiki
ரொமிலா தாப்பர்
ரொமிலா தாப்பர்

ரொமிலா தாப்பர் (பிறப்பு: நவம்பர் 30, 1931) எழுத்தாளர், இந்திய வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். பண்டைய இந்தியாவைப் பற்றிய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இவரின் ஆய்வுகள் பண்டய இந்தியாவைப் பற்றி உலக மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தை ஆழமாக மாற்றின.

வாழ்க்கைக் குறிப்பு

ரொமிலா தாப்பர் உத்தரப் பிரதேச மாநிலம் பிரிட்டிஷ் இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் தயாராம் தாப்பர், கெளசல்யா இணையரின் மகளாக நவம்பர் 30, 1931-ல் பிறந்தார். பத்திரிகையாளர் ரொமேஷ் தாபர் இவரது சகோதரர். சகோதரி பிம்லா தாப்பர். புனேவிலுள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தந்தையின் பணிச்சூழல் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் பள்ளிக்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றார். இடைநிலைக்கல்வியை புனேயின் நெளரோஸ்ஜி வாடியா பள்ளியில் பயின்றார். டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள மிராண்டா ஹவுஸில் கல்வி கற்றார். சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1958-இல் லண்டன் பலகலைக்கழகத்தில் (School of Oriental and African Studies) ஏ.எல். பாஷத்தின் கீழ் இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரொமிலா தாப்பர்

. இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை

ஆசிரியப்பணி

ரொமிலா தாப்பர் 1961, 1962-ஆண்டுகளில் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1963 முதல் 1970 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1971 முதல் 1991வரை புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றின் பேராசிரியராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பின் கெளரவப் பேராசிரியாக இருந்தார். கார்னெல் பல்கலைக்கழகம் , பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி ஆகியவற்றில் தாப்பர் வருகை தரும் பேராசிரியராக இருந்தார்.

எழுத்து

ரொமிலா தாப்பர் வட இந்தியாவில் பொ.மு முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்துகொள்ள சமூக-வரலாற்று முறைகளைப் பயன்படுத்தினார். இந்தோ-ஆரிய மேய்ச்சல் குழுக்கள் கங்கைச் சமவெளிக்கு நகர்ந்தபோது எவ்வாறு சாதிய அடிப்படையில் பிரிந்து தங்களுக்கான மாநிலங்களின் அடிப்படை வடிவங்களை உருவாக்கினர் என்பதை விளக்கினார். ராமாயணமும் மகாபாரதமும் அளிக்கும் சான்றுகளின் துணை கொண்டு இக்குழுக்களின் தன்மைகளை பகுப்பாய்வு செய்ய முடிவதை எடுத்துரைத்தார்.

'From Lineage to State', 'Asoka and the Decline of the Mauryas', 'Early India: From Origins to AD 1300', 'popular History of India, Part I' ஆகியவை ரொமிலா தாப்பரின் முக்கியமான புத்தகங்கள். 1957-இல் சீனாவுக்கு சென்று புத்த மதத்தைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

ரொமிலா தாப்பர் வரலாற்றுக் கோட்பாடுகளுக்கு மேலதிகமாக, கலாச்சார மானுடவியல் மற்றும் சமூகவியல் துறைகளில் இருந்து வழிமுறைகளைப் பயன்படுத்தி, உலக வரலாற்றின் சூழலில் இந்தியாவின் வரலாற்று ஆய்வை வெற்றிகரமாக மீட்டுருவாக்கம் செய்தார். பகுத்தறிவு, ஆதாரம் சார்ந்த விசாரணை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த அணுகுமுறைகள் மூலம் வரலாற்றாய்வு செய்தார்.

ரொமிலா தாப்பர்

விவாதம்

  • 2002-இல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான இந்திய கூட்டணி அரசாங்கம் சமூக அறிவியல் மற்றும் வரலாற்றிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை மாற்றியது. ஆறாம் வகுப்புக்கான பண்டைய இந்தியா குறித்த பாடப்புத்தகத்தின் ஆசிரியராக இருந்த ரோமிலா தாபர் தனது அனுமதியின்றி செய்யப்பட்ட மாற்றங்களை எதிர்த்தார். பண்டைய காலத்தில் மாட்டிறைச்சி உண்பது பற்றிய பத்திகளை நீக்கியதைக் கண்டித்தார். பிபன் சந்திரா, சுமித் சர்க்கார், இர்பான் ஹபீப், ஆர்.எஸ் ஷர்மா, வீர் சங்வி, திலீப் பட்கோன்கர் மற்றும் அமர்த்தியா சென் உள்ளிட்ட பிற வரலாற்றாசிரியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
  • 2006 -ல் கலிஃபோர்னிய இந்து பாடநூல் சர்ச்சை பற்றி எழுதுகையில் தாப்பர் பள்ளி பாடப்புத்தகங்களில் இந்து மதம் மற்றும் இந்திய வரலாற்றை உள்ளடக்குவதற்கு இந்து குழுக்களால் முன்மொழியப்பட்ட சில மாற்றங்களை எதிர்த்தார்.
  • 1992-ல் அவர் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பத்ம பூஷணை நிராகரித்தார்.
  • 2005-ல் மீண்டும் பத்ம பூஷண் விருதை தாப்பர் நிராகரித்தார். "நான் கல்வி நிறுவனங்கள் அல்லது எனது தொழில்முறை பணிகளுடன் தொடர்புடையவர்களிடமிருந்து விருதுகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன் மாநில விருதுகளை அல்ல" என விளக்கம் அளித்தார்.

விருதுகள், சிறப்புகள்

  • 1983-ல் இந்திய வரலாற்று காங்கிரஸின் பொதுத் தலைவராக இருந்தார்
  • 1999-ல் பிரிட்டிஷ் அகாதெமியின் தொடர்புடைய உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2019-ல் அமெரிக்க தத்துவ சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1976-ல் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் வழங்கப்பட்டது.
  • லேடி மார்கரெட் ஹால், ஆக்ஸ்போர்டு மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) ஆகியவற்றில் கௌரவ உறுப்பினராக உள்ளார்.
  • சிகாகோ பல்கலைக்கழகம் , பாரிஸில் உள்ள இன்ஸ்டிட்யூட் நேஷனல் டெஸ் லாங்குஸ் மற்றும் நாகரிக ஓரியண்டல்ஸ் , ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் , எடின்பர்க் பல்கலைக்கழகம் (2004), கல்கத்தா பல்கலைக்கழகம் (2002) மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்(2009) இவற்றில் கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  • 2009-ல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2017-ல் ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியின் கௌரவ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004-ல் அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் "தெற்கின் நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள்" க்ளூஜ் நாற்காலியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்
  • 2008-ல் பீட்டர் பிரவுனுடன் இணைந்து மனிதநேய ஆய்வுக்கான க்ளூஜ் பரிசின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நூல் பட்டியல்

  • Aśoka and the Decline of the Mauryas (1961, Oxford University Press)
  • A History of India: Volume 1 (1966, nguin)
  • Ancient India, Medieval India (1966, NCERT Textbooks)
  • The Past and Prejudice (Sardar Patel Memorial Lectures) (National Book Trust, 1975)
  • Ancient Indian Social History: Some Interpretations (1978, Orient Blackswan)
  • Exile and the Kingdom: Some Thoughts on the Ramayana (Rao Bahadur R. Narasimhachar Endowment lecture) (1978)
  • Dissent in the Early Indian Tradition (Volume 7 of M.N. Roy memorial lecture, 1979, Indian Renaissance Institute)
  • From Lineage to State: Social Formations of the Mid-First Millennium B.C. in the Ganges Valley (1985, Oxford University Press)
  • The Mauryas Revisited, Sakharam Ganesh Deuskar lectures on Indian history (1987, K.P. Bagchi & Co)
  • Interpreting Early India, 1992 (2nd edition 1999) (Oxford University Press 1999)
  • Cultural Transaction and Early India: Tradition and Patronage (Two Lectures, 1994)
  • Śakuntala: Texts, Readings, Histories, 2002; Anthem,
  • History and Beyond (2000, OUP)
  • Cultural Pasts: Essays in Early Indian History (2003, OUP)
  • Early India: From Origins to AD 1300 (2002, Penguin)
  • Somanatha: The Many Voices of History (2005, Verso)
  • India: Historical Beginnings and the Concept of the Aryan (2006, National Book Trust)
  • The Aryan: Recasting Constructs (Three Essays) (2008, Delhi)
  • The Past before Us: Historical Traditions of Early North India (2013, Harvard University Press)
  • The Past As Present: Forging Contemporary Identities Through History (2014)
  • Voices of Dissent: An Essay (2020, Seagull Books)
  • The Future in the Past: Essays and Reflections (2023, Aleph Book Company)
  • Our History, Their History, Whose History? (2023, Seagull Books)
தொகுப்பாசிரியர்
  • Communalism and the Writing of Indian History (Romila Thapar, Harbans Mukhia, Bipan Chandra, 1969, People's Publishing House)
  • Situating Indian History: For Sarvepalli Gopal (1987)
  • Indian Tales (1991, Puffin)
  • India: Another Millennium? (2000, Viking)
கட்டுரைகள்
  • India before and after the Mauryan Empire (in The Cambridge Encyclopedia of Archaeology) (1980)
  • Imagined Religious Communities? Ancient History and the Modern Search for a Hindu Identity (Paper in Modern Asian Studies, 1989)
  • The Theory of Aryan Race and India: History and Politics (Social Scientist)
  • Somanatha and Mahmud (Frontline, Volume 16)
  • Perceiving the Forest: Early India, Paper in the journal, Studies in History (2001)
  • Role of the Army in the Exercise of Power, Essay in Army and Power in the Ancient World (2002) Franz Steiner Verlag
  • The Puranas: Heresy and the Vamsanucarita, Essay in Ancient to Modern: Religion, Power and Community in India (2009)
  • Rāyā Asoko from Kanaganahalli: Some Thoughts (Essay in Airavati)
  • Was there Historical Writing in Early India? (Essay in Knowing India, 2011, Yoda Press)

இணைப்புகள்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.