அர்ச். சவேரியார் காவியம்

From Tamil Wiki
Revision as of 23:33, 27 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அர்ச் . சவேரியார் காவியம் (நூல் தோற்றம்: 1877; பதிப்பு: 1882) இயேசுவின் திருத்தொண்டர்களுள் ஒருவராகிய புனித பிரான்சிஸ் சவேரியாரைப் பற்றிப் பாடப் பெற்ற காப்பிய நூல். இதனை இயற்றியவர், அந்தோணி முத்து. இறைத்தொண்டர் ஒருவரைத் தலைமை மாந்தராகக் கொண்டு படைக்கப்பட்ட ஒரே காப்பியம் அர்ச். சவேரியார் காவியம்.

பிரசுரம், வெளியீடு

அர்ச். சவேரியார் காவியம் சிலுவை முத்து நாயகரின் புதல்வர் அந்தோணிமுத்துவால் 1877 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பண்டிதர் ௮. சவேரிமுத்து நாயகர் அவர்களின் பொருளுதவியால் சென்னையிலுள்ள இந்தியன் அச்சகத்தில், 1882-ல்,  பதிப்பிக்கப்பட்டது.