under review

சுதா ராமன்

From Tamil Wiki
Revision as of 07:43, 19 November 2023 by Logamadevi (talk | contribs)
சுதா ராமன்
சுதா ராமன்

சுதா ராமன் வனத்துறை அதிகாரி, சமூகசெயற்பாட்டாளர். மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக 'தமிழ்நாடு ட்ரீபீடியா' என்ற செயலியை உருவாக்கியவர். வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரியை புதுப்பித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுதா ராமன் நெய்வேலியில் பிறந்தார். பயோ மெடிக்கல் பொறியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சுதா ராமன் 21 வயதில் திருமணம் செய்துகொண்டார். விப்ரோ நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று இந்திய வனத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பணிகள்

சுதா ராமன் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் நிலப் பயன்பாடு பிரிவில் பணியமர்த்தப்பட்டார். வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனராக பதவியேற்றார். வண்டலூர் விலங்குகளை நேரலையில் பார்க்கும் வசதி, ஆன்லைன் டிக்கெட் வசதி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் பணியில் இவர் பங்களித்தார்.

ஓட்டேரி ஏரி புனரமைப்பு

வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரியை புதுப்பித்தார். ஏரியில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் தடுக்க அணைகள் கட்டப்பட்டன. மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் உயிரியல் பூங்காவில் நிலத்தடி நீர் அதிகரித்தது. அங்குள்ள விலங்குகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் நீர் விநியோகம் கிடைத்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வலைதளத்தை நவீனப்படுத்தும் முயற்சியையும் இவர் மேற்கொண்டார்.

தமிழ்நாடு ட்ரீபீடியா செயலி

‘தமிழ்நாடு ட்ரீபீடியா’ (மரக் களஞ்சியம்) (Tamilnadu Treepedia App) என்ற ஒரு செயலியை உருவாக்கி, மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன மாதிரியான மண், என்ன வகை மண்ணிற்கு என்ன வகையான மரங்களை வளர்க்க வேண்டும், என்ன மாதிரியான உரங்களைப் பயன்படுத்த வேண்டும், ஊடு பயிராக எதை விதைக்கலாம், எவ்வளவு இடைவெளியில் அடுத்தடுத்து மரங்கள் நடவேண்டும், என்ன வகை மரங்களுக்கு என்ன மாதிரியான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என எல்லாத் தகவல்களையும் நேரடியாக சேமித்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். மாவட்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மரம் வளர்ப்பு தொடர்பான வீடியோக்கள் செய்து இதில் பதிவேற்றியுள்ளார். நேரடி ஆலோசனை வேண்டும் என்பவர்களுக்கு அவர்களுக்கு அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என ரெண்டு மொழியிலும் உள்ளன.

விருதுகள்

  • சுதா ராமன் 2019-ஆம் ஆண்டிற்கான டாக்டர் கலாம் இன்னோவேஷன் இன் கவர்னன்ஸ் (Kalam Innovation in Governance) விருதைப் பெற்றார்.
  • சுதா ராமன் 2023-ஆம் ஆண்டிற்கான 'முகம்' விருது பெற்றார்.

உசாத்துணை


✅Finalised Page