being created

அருண்மொழிநங்கை

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


எழுத்தாளர் அருண்மொழிநங்கை

அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

அருண்மொழிநங்கை சற்குணம் - சரோஜா தம்பதியருககு மார்ச் 6, 1970இல் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். இவரின் தந்தை வழி தாத்தா இராமச்சந்திரன் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். அருண்மொழி நங்கை வளர்ந்தது வளர்ந்தது பட்டுக்கோட்டையில். திருவாரூரில் மிக சிறு வயதிலேயே இவருக்கு இலக்கியமும் இசையும் அறிமுகமாகின.

இவரின் கணவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவருக்கு அஜிதன், சைதன்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வளர்ந்தது பட்டுக்கோட்டையில். திருவாரூரில் மிக சிறு பிராயத்திலேயே இலக்கியமும், இசையும் அறிமுகமாகியது. இளங்கலை மதுரை வேளாண்மை கல்லூரியில் பயின்றேன். 1990ல் ஜெயமோகனின் ரப்பர் நாவல் மூலம் அறிமுகமானார். அதனை படித்த பின்பு அவருடன் மலர்ந்த காதலில் 1991ல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

1993ல் தர்மபுரியில் மத்திய அரசு பணியில் சேர்ந்தேன். பின் நாகர்கோவிலில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன்.

இலக்கியம், இசை மீது தீராத பற்றும், பயணங்களில் தீராத மோகமும் கொண்டவள். ஓய்விற்கு பின் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவினுள் வருடம்தோறும் தொடர்ந்து பயணம் செய்து வருபவள்.


அருண்மொழிநங்கையின் இலக்கிய ஆதர்சங்கள் எனத் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்தரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ.முத்துலிங்கம் ஆகியோரையும் இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா ஆகியோரையும் உலக இலக்கியகளில் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோரையும் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரையும் தாண்டி எழுத்தாளர் ஜெயமோகன் இவருக்கு மிகவும் அணுக்கமானவர். அவரே இவருக்கு ஆசானும் கணவருமாக அமைந்தவர்.

இலக்கிய இடம்

நூல்கள்

  • பனி உருகுவதில்லை ( இது இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு நூல். இந்த நூலினை எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகம்) 2021இல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது. )

உசாத்துணை