அனந்தநாதர்
அனந்தநாதர் சமண சமயத்தின் பதினான்காவது தீர்த்தங்கரர்.
புராணம்
அனந்தநாதர் இக்சவாகு குலமன்னர் சிம்மசேனாவுக்கும், இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தார். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.
முற்பிறப்பு
தாட்கிகண்டில் உள்ள அரிஷ்ட நகரத்தின் அரசர் அழகு, ஆளுமை, துணிச்சல் கொண்டதால் அனைத்து பெண்களாலும் விரும்பப்பட்டார். ஆன்மிகப் பயிற்சிகளில் நாட்டம் கொண்டு ஆச்சார்யா சித்ராட்ஷரிடம் இருந்து தீட்சை எடுத்தார். ஆன்மாவை தூய்மைப்படுத்தினார். இதன் காரணமாக அவர் கடவுள்களின் புஷ்போதர் பரிமாணத்தில் மறு அவதாரம் எடுத்தார். இங்கிருந்து இந்த ஆன்மா பூமி வரை பயணம் செய்து சுயஷா தேவியின் கருவறை வரை சென்று தீர்த்தங்கரராக பூமிக்கு வந்து இறுதி சுதந்திரத்தை அடைந்தார்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: பொன்னிறம்
- லாஞ்சனம்: முள்ளம்பன்றி
- மரம்: பீப்பல்-அத்தி மரம்
- உயரம்: 50 தனுஷா (150 மீட்டர்)
- கை: 2 நூறு கைகள்
- முக்தியின் போது வயது: 30 லட்சம் ஆண்டுகள்
- முதல் உணவு: சகத்பூரின் மன்னர் விசாகர் அளித்த கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 50 (ஸ்ரீ ஜெயா)
- யட்சன்: கின்னர் தேவர்
- யட்சினி: அனந்த மாதேவி
இலக்கியம்
பொ.யு. 1200-ல், ஜன்னா என்பவர் அனந்தபுராணம் எனும் நூலை எழுதினார்.
கோயில்கள்
- கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பற்றாவில் அனந்தநாதரின் கோயில் உள்ளது.
- அனந்தநாதர் கோயில், மதுபன்
உசாத்துணை
- https://en.encyclopediaofjainism.com/index.php/14._Anantnath_Swami
- http://jainmuseum.com/history-of-anantnath-bhagwan.htm
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.